2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
News Image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்

தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  எனவே, இவ்விருதுகளுக்கான  விண்ணப்பங்களை  www.tntourismawards.com என்ற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும் தமிழ்நாடு சுற்றுலா விருது

தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்தபயணபங்குதாரர் , சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம் , தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப்பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம்-சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் உள்ளிட்ட 13 வகையான விருதுகள் சுற்றுலாத்துறையின்  மூலம்  வழங்கப்படுகின்றன.  எனவே மேற்குறிப்பிட்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருகின்ற 30-9-2026க்குள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks