"2வது திருமணம்... 2 வருஷ ஜெயில்" நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- அதிர்ச்சியில் அதிமுக மாஜி எம்பிக்கு இரண்டாவது திருமணம்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

"2வது திருமணம்... 2 வருஷ ஜெயில்" நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- அதிர்ச்சியில் அதிமுக மாஜி எம்பிக்கு இரண்டாவது திருமணம்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை!
News Image

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அ.தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினருக்கு 2 ஆண்டுகள்  சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 69) இவர் கடந்த 1977 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதுார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். இவருக்கு லலிதா, (வயது 63) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல் வனிதா (வயது 58) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டாவது திருமண செய்து கொண்ட தகவல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியவருகிறது.

இதனைத் தொடர்ந்து, முதல் மனைவி லலிதா கடந்த 2018 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மற்றும் இரண்டாவது மனைவி வனிதா, வனிதாவின் மகன் பிரேம்நாத் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வினோத் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்த தீர்ப்பளித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks