தஞ்சாவூரில் அதிரடி! ஒரே நாளில் 19 வட்டாட்சியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் ஆர்.ரேவதி உத்தரவு!

தஞ்சாவூரில் அதிரடி! ஒரே நாளில் 19 வட்டாட்சியர்கள் இடமாற்றம் - ஆட்சியர் ஆர்.ரேவதி உத்தரவு!
News Image

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நிர்வாகச் சீரமைப்பை மேம்படுத்தும் வகையிலும், மக்கள் நலப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கிலும் வட்டாட்சியர் நிலையில் பணியாற்றி வரும் 19 அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆர்.ரேவதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திடீர் பணியிட மாற்றம், தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவுகள், வட்ட வழங்கல் அலுவலகங்கள் மற்றும் நில எடுப்பு பிரிவுகளில் பணியாற்றி வந்த முக்கிய அதிகாரிகள் பலர் இதன் மூலம் மாற்றப்பட்டுள்ளனர்.  மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் முழுமையான பட்டியல் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பொறுப்புகளின் விவரங்கள் வருமாறு:

கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகள்:

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்த சு.பாக்கியராஜ், கும்பகோணம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம் வட்டாட்சியராகப் பணியாற்றிய வெ.பூங்கொடி, கும்பகோணம் தனி வட்டாட்சியராக (ஆலய நிலங்கள் பிரிவு) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் தனி வட்டாட்சியராக (ஆலய நிலங்கள் பிரிவு) இருந்த எஸ்.கார்த்திகேயன், கும்பகோணம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராகப் பணியாற்றி வந்த ஆர்.ரவிச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாபநாசம் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த எஸ்.சந்தனவேல், கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றி வந்த எம்.செந்தில்குமார், திருவிடைமருதூர் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவிடைமருதூர் வட்டாட்சியராக இருந்த ஆர்.சாந்தமீனா, கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நிலநிர்வாக ஆணையகரத்தில் பணியாற்றி வந்த ஏ.ஜெசிமா சுல்தானா, கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர், பூதலூர் மற்றும் திருவோணம் பகுதிகள்:

திருவோணம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த எஸ்.செந்தில்குமார், பூதலூர் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பூதலூர் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த கே.விவேகானந்தன், திருவோணம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி, மருத்துவ விடுப்பில் இருந்த அ.மங்கையர்கரசி, தஞ்சாவூர் கேபிள் டிவி தனி வட்டாட்சியராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

தஞ்சாவூர் கேபிள் டிவி தனி வட்டாட்சியராக இருந்த எம்.மலர்குழலி, தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்புப் பிரிவின் தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய ஏ.பூவந்திநாதன், பட்டுக்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

பாபநாசம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஜி.சிவக்குமார், தஞ்சாவூர் ரயில்வே திட்ட நில எடுப்பு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ விடுப்பில் இருந்த திருவோணம் முன்னாள் வட்டாட்சியர் ஆர்.செல்வம், பாபநாசம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த வே.பிரேமாவதி, ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு பகுதிகள்:

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜி.சாந்தகுமார், பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றி வந்த டி.சுகுமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றி வந்த என்.கவிதா, பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 வட்டாட்சியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வருவாய்த்துறை வட்டாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சேவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், தாலுகா அளவிலான நிர்வாகப் பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks