செல்லப்பிராணி வளர்ப்போருக்கு அதிர்ச்சி செய்தி: 15 நாள் டைம்... தவறவிட்டால் ரூ.25,000 அபராதம்!

செல்லப்பிராணி வளர்ப்போருக்கு அதிர்ச்சி செய்தி: 15 நாள் டைம்... தவறவிட்டால் ரூ.25,000 அபராதம்!
News Image

சென்னையில் வெளிநாட்டு செல்லப்பிராணிகள் மற்றும் வன உயிரினங்களை வைத்திருப்போர், உரிய உரிமம் பெற 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வனத்துறை கெடு விதித்துள்ளது. சென்னையில் 200-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட வன உயிரினங்களை விற்பனை செய்யவும், வீடுகளில் வளர்க்கவும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வெளிநாட்டு வன உயிரினங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்க்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டாலும், அதற்கு முறையான உரிமம் பெற வேண்டும் என மத்திய வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

உரிமம் பெறுவதற்கான பின்னணியும் விதிகளும்

பல்வேறு நாடுகளில் அழிந்து வரும் வன உயிரினங்கள் 621 வகைகள், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் 497 வகைகள் மற்றும் பரவலாக வளர்க்கப்படும் 217 வகைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்ப்போர் மற்றும் விற்பனை செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இத்தகைய பிராணிகளின் துல்லியமான எண்ணிக்கை குறித்த தகவல்கள் அரசிடம் முறைப்படி இல்லை. இதனால், வெளிநாட்டு வன உயிரினங்களை வளர்க்க, விற்க மற்றும் இனப்பெருக்கம் செய்ய முறையாக விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கட்டணம் மற்றும் பதிவு செய்யும் முறை

மத்திய வனத்துறையின் 2024-ஆம் ஆண்டு சட்டப்படி, வெளிநாட்டு வன உயிரினங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்ப்போர், விற்பனை செய்வோர் மற்றும் புதிதாக வாங்குவோர் 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும் என வேளச்சேரி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் செல்லப்பிராணிகள் இனப்பெருக்கம் செய்தாலோ அல்லது இறந்தாலோ அதுகுறித்த விவரங்களை ஏழு நாட்களுக்குள் விண்ணப்பித்து தெரிவிக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்து விற்பனை மையம் நடத்த 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கான உரிமத்தைப் பெற வேண்டும். உரிமம் பெறாமல் பிராணிகளை வளர்த்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் இணையதளம் மற்றும் உதவி எண்

அனைத்து வகையான உரிமங்களுக்கும் parivesh.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற 044–2220 0335 என்ற தொலைபேசி எண்ணில் வனத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks