தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!

தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!
News Image

திசை- தமிழை அறிவோம்" தமிழி வரி வடிவங்களை அறிதல் பயிற்சி பெற்று 1330 திருக்குறளை தமிழி வடிவத்தில் எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திசை- தமிழை அறிவோம்" தமிழி வரி வடிவங்களை அறிதல் பயிற்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "திசை- தமிழை அறிவோம்" தமிழி வரி வடிவங்களை அறிதல் பயிற்சி பெற்று 1330 திருக்குறளை தமிழி வடிவத்தில் எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்களை இன்று(25.09.2026) சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த மாதம் 20.08.2026 அன்று விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் விருதுநகர் ஒன்றியத்தை சேர்ந்த 25 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, திசை- தமிழை அறிவோம் தமிழி வரி வடிவங்களை அறிதல் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

தமிழி எழுத்துக்களை எழுத  வாசிக்க பழகியுள்ளனர்

அதன் விளைவாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழி எழுத்துக்களை எழுத  வாசிக்க பழகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இனாம் ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறள்களையும் தமிழி (பிராமி) எழுத்து வரி வடிவில் வடித்துள்ளனர். அம்மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் வழங்கி பாராட்டும் விதமாக இன்று   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி அம்மாணவிகளை நேரில் அழைத்து வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், அருங்காட்சியக காப்பாட்சியர் திரு.பால்துரை, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks