12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது

12 வயது பேரனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி !! போக்சோவில் அதிரடி கைது
News Image

பாட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன் ?

ஈரோடு மாவட்டம்  புதிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் , இவரது பெற்றோர்கள் சமையல் ஆர்டர்கள் எடுக்கும் வேலை செய்து வருகின்றனர். எனவே கல்யாண சமயங்களில் அதிக வேலைகள் இருக்கும் என்பதால் சிறுவனை , லக்காபுரத்தில் உள்ள அவரது தாய் வழி பாட்டி வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று சிறுவன் பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வற்புறுத்திய போது அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் பதட்டமாக காணப்பட்டுள்ளார்.

இதனை கவனித்த சிறுவனின் தாய் பாட்டி வீட்டிற்கு செல்லாதது ஏன் ? மற்றும் ஏன் இவ்வளவு பதட்டமடைகிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுவன் அழுது கொண்டே அவரது பாட்டி சிறுவன் 6 ஆம் வகுப்பு படித்தது முதல் தற்போது வரை கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

ஏன் இப்படி பன்னீங்க ?

இதையடுத்து, தனது மகனிடம் பாலியல் ரீதியாக அத்து மீறி நடந்து கொண்டதாக கூறப்படும் தனது தாயார் மீது ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று "ஏன் இப்படி பண்ணீங்க " என கேட்டு சண்டையிட்டிருக்கிறார்.

தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுவனின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12 வயது பேரனுக்கு சொந்த பாட்டியே பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks