" 10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

" 10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
News Image

"மாணவியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்"

தருமபுரி மாவட்டம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் தங்கவேல். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் , கடந்த சில நாட்களாக பள்ளியில் பயிலும் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு தங்கவேல் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

மேலும் மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாசமாக அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவி இது குறித்து தனது நண்பர்களிடம் பகிர்ந்த நிலையில் இதனை அறிந்த அப்பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தங்கவேலை கண்டித்ததாக தெரிகிறது.

"பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்"

இருப்பினும் தங்கவேல் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது உறவினர்கள் உதவியுடன் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் ஆசிரியர் தங்கவேலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் , மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரது செல்போனுக்கு குறுஞ் செய்திகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

"போக்சோ சட்டத்தில் கைது"

இதனைத் தொடர்ந்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் , ஆசிரியர் தங்கவேல் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு பள்ளிகளில் இது போன்ற புகார்களில் சிக்கி, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks