Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க

Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
News Image

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இறங்கி, இறங்கி ஆடிய சூர்யபண்டாரா:

இந்த தொடரில் இலங்கையை நிலைகுலைய வைத்ததில் இளம் பந்துவீச்சாளர் மானவ் சுதர் மிகப்பெரிய பங்காற்றி வருகிறார். அவரது அபாரமான ஆற்றல் அவர் இந்திய சுழலின் எதிர்கால சூப்பர்ஸ்டார் என்பதை ஆழமாகவே பறைசாற்றி வருகிறது. இன்று இலங்கை அணி 2வது இன்னிங்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த போது, அந்த அணியை காப்பாற்ற போராடியவர் சூர்யபண்டாரா.

அவர் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்த நிலையில்,  இளம் வீரர் மானவ் சுதர் வீசிய ஓவரின் பந்துகளை இறங்கி, இறங்கி ஆடி ஸ்ட்ரோக் வைத்தார். முதல் பந்து, 2வது பந்தையும் இறங்கி ஆடி ஸ்ட்ரோக் வைத்த சூர்யபண்டாரா 3வது பந்திலும் அதேபோல இறங்கி அடிக்க முயற்சித்தார்.

பெவிலியனுக்கு அனுப்பிய மானவ்:

Manav Suthar fooled the Sri Lankan batter to get him out. 😂😭

- Just look at the reaction of srilankan batsman 🤯👀
pic.twitter.com/9N8QHRuzGG
— lndian Sports Network (@IS_Netwrk29) August 26, 2026

ஆனால், அப்போது இந்திய பந்துவீச்சாளர் மானவ் சுதர் சமயோஜிதமாக சிந்தித்து பந்தை ஒயிட்சைடில் வீச சூர்யபண்டாரா பந்தை தவறவிட்டார். அதை சரியாக பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் அவரை அவுட்டாக்கிானார். இதனால், 173 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 1 சிக்ஸருடன் 92 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சூர்யபண்டாரா பெவிலியன் திரும்பினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த இலங்கை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தியாவின் சுழல் எதிர்காலம்:

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலமாக கருதப்படும் மானவ் சுதர் இனி வரும் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்வார் என்று கருதப்படுகிறது. 24 வயதான மானவ் சுதர் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு எதிராக அறிமுகமான அவர் இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்புவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் கணித்துள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 503 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியதால் ஃபாலோ ஆன் ஆகியது.

தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடி வரும் இலங்கை தற்போது 229 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. இந்திய அணியைக் காட்டிலும் 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு ஆகும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks