US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
News Image

ஈரானில், தங்கள் முற்றுகையை உடைக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. பனாமா நாட்டுக் கொடியை ஏந்திய கப்பல் ஒன்று, ஹெலிகாப்டரிலிருந்து சுடப்பட்டது. இந்த சம்பவம் இன்று நிகழ்ந்தது. பனாமா நாட்டுக் கொடியை ஏந்திய கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை உடைக்க அந்தக் கப்பல் முயன்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரி கூறியத என்ன.?

இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்ட அந்த அமெரிக்க அதிகாரி, "ஈரானிய துறைமுகங்களுக்கு கடற்படை முற்றுகையை அமல்படுத்தியபோது, ​​கப்பல் குழுவினர் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கப்பலின் ரேடாரை நோக்கி சுட்டது. இதற்கிடையே, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய அரசாங்கத்தின் மீது தொடர்ந்து பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும், இந்த நடவடிக்கை அந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்." என்று கூறியுள்ளார்.

ஈரானிய துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற பனாமா நாட்டுக் கொடி கொண்ட கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வால்டர் ப்ளூம்பெர்க் தெரிவிக்கிறார். எச்சரிக்கைகளை புறக்கணித்ததால், அந்த கப்பல் தாக்கப்பட்டது. ஓமான் வளைகுடாவில், ஒரு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர், கப்பலின் ரேடாரை நோக்கிச் சுட்டதில், கப்பலில் தீப்பிடித்தது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. வான்கார்ட் என்ற கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், அந்த கப்பலை வேலா நோவா என அடையாளம் கண்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் 17 மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

ஏமனில் ஹவுதி தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேர்

இதற்கிடையே, இன்று அல் மாண்டேப் பகுதியில் ஒரு சிறிய சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதாகவும், இதில் மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் ஏமன் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. தான்சானியக் கொடியை ஏந்திய 'திஹாமா' என்ற கப்பல், ஏமனின் அல் மோக்கா கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத எறிபொருளால் தாக்கப்பட்டதாக, ஐக்கிய ராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு ஹவுதிக்களால் இந்த கப்பல் குறிவைக்கப்பட்டது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் என மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்தபோது, ​​அந்த கப்பல் ஓமனின் சலாலாவிலிருந்து ஜிபூட்டிக்குச் சென்று கொண்டிருந்தது.

ஓயாத சண்டை

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், அதையே விரும்புவதாக ட்ரம்ப் கூறினாலும், மறுபுறம் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. தங்கள் மீது தாக்குதல் நடந்தால், பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அமெரிக்காவும் தாக்குதல்களை நிறுத்தாமல் இருக்கிறது. இரு தரப்பும் இப்படி இருந்தால், சண்டை எப்போது ஓய்வது என்ற கேள்வியே உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ட்ரம்ப் புதிதாக ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்காவிடம் ஈரான் இழப்பீடு கேட்டுவந்த நிலையில், தற்போது, ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ட்ரம்ப். இதன் மூலம், சண்டை இப்போதைக்கு முடியாது என்பது தெளிவாகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks