உக்ரைன் இன்று (ஆகஸ்ட் 16) ரஷ்யா மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக கீவ் இதுவரை நடத்தியதிலேயே இதுவே மிகவும் கொடூரமான பதிலடியாகும்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்களின்படி, உக்ரைன் பொடோல்ஸ்கில் உள்ள ஒரு பில்பெர்ரி கிடங்கைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருந்து கருப்புப் புகை எழுவதைக் காண முடிகிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ஒரே இரவில் 822 உக்ரைனிய ஆளில்லா விமானங்களை அழித்ததாகக் கூறியுள்ளது. இதற்கிடையே, ரஷ்யா ஒரே இரவில் (ஆகஸ்ட் 15-16) உக்ரைன் மீது பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் ஒரு எஃகு ஆலையில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

822 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, சமீபத்திய தாக்குதல்களில், நாடு முழுவதும் 822 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து மாஸ்கோ பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஒன்றில், 83 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதாக மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரே வோரோபியோவ் கூறினார். பொடோல்ஸ்க் பிராந்தியத்தில் பலர் காயமடைந்தனர். ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸுக்கு சொந்தமான ஒரு கிடங்கு தாக்கப்பட்டது.

Russia says 600 Ukrainian drones hit Moscow overnight. Over 200 intercepted near the capital. Fires at a Wildberries warehouse in Podolsk, casualties in Moscow and Rostov regions. pic.twitter.com/0o4bIZbLW4

— Open Source Intel (@Osint613) August 16, 2026

மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக உக்ரைன் கருதும் ரஷ்யாவின் பொருளாதார உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக, சமீப வாரங்களில் அது வைல்ட்பெர்ரிஸ் பகுதியை தாக்கி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தெற்கு ரஷ்ய நகரமான பெல்கோரோட் அருகே ஒரு பேருந்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததை அப்பகுதி ஆளுநர் உறுதிப்படுத்தினார். மேலும், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள ஏவுகணை எரிபொருள் உற்பத்தி நிலையம் மீதும் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியது.

பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தும் உக்ரைன் மற்றும் ரஷ்யா

உக்ரைன் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யா கடந்த வாரம் ருமேனிய எல்லைக்கு அருகிலுள்ள டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதித் துறைமுகத்தை தாக்கியது. உக்ரைனும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட ரஷ்ய இலக்குகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் கருங்கடலில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்துள்ளனர்.

இதற்கிடையே, குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலால், மின் உற்பத்தி மற்றும் ஊது உலைத் துறைகள் சேதமடைந்தன. ஆலையில் உற்பத்திப் பணிகள் பகுதியளவு நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால், தலைநகரின் குறைந்தது இரண்டு மாவட்டங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக மேயர் விட்டாலி கிளிச்கோ கூறினார். இதில் 3 பேர் காயமடைந்ததாக நகரின் ராணுவ நிர்வாகம் தெரிவித்தது. பிராந்தியம் முழுவதும் நடந்த ட்ரோன் தாக்குதல்களில், ஒரு குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்ததாக, கீவ் பிராந்திய ஆளுநர் திமூர் தகாசென்கோ கூறினார். ருமேனியாவின் வான்பரப்பில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article