Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
News Image

Udhayanidhi On CM Vijay: தேர்தல் முடிவுக்கு பின் ஒரு துறை அதிகம் ஆக்டிவ் ஆக இருக்கிறது என்றால் அது திமுகவின் சட்டத்துறை தான் என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் சர்கஸ் கும்பல் - உதயநிதி

சென்னையில் திமுகவில் தலைமை நிலையமான அறிவாலயத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, “திமுக சட்டத்துறை போராடி பெற்றுக்கொடுத்த அனைத்தும் முக்கியமானவை. தேர்தல் காலங்களில் வார் ரூம் அமைத்து சட்டத்துறை செய்த பணிகள் யாராலும் செய்ய முடியாது. தமிழ்நாடே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு இன்று வந்துள்ளது. சர்க்கஸ் கும்பல் கும்பல் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சட்டத்துறையின் பணி அவசியமானதாக தேவைப்படுகிறது. மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்படுகிறது. தூங்கி எழுந்திருத்தால் யாரை கைது செய்யலாம் என்று இந்த அரசு செயல்படு வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன் இந்த அரசு என்னையும் கைது செய்ய முயற்சித்தது.

தவெக அரசின் கைது நடவடிக்கை

காலை 8 மணிக்கு என் வீட்டில் பேப்பர் படித்து கொண்டிருக்கும்போது காவல்துறை என் வீட்டுக்கு வந்தனர்.  டம்மி முதல்வர், வெட்கங்கெட்ட, கேடு கெட்ட அரசு என விவசாயிகள் கூட்டத்தில் பேசியதற்காக கைது செய்ய வந்துள்ளனர் என்று நினைத்தேன். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசியதற்காக கைது செய்தனர்.  என்னை கைது செய்ய காவல்துறையினர் வந்த உடன் நான் முதலில் வழக்கறிஞர் அணியை தான் தொடர்பு கொண்டேன். தலைவர் போன் செய்து உடனே கைதாக வேண்டாம் என கூறினார்.  மின்னல் வேகத்தில் உயர்நீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர்கள் சட்டபோராட்டத்தை கையிலெடுத்தனர். என்னை சட்டமன்றத்தில் பேசுவதை தடுக்கும் அளவிற்கு இவர்களுக்கு மூளை இல்லை. அப்படியே நான் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரியாதவர்கள். டம்மி முதலமைச்சருக்கும் யார் எம் எல் ஏ, யார் அமைச்சர் என்று கூட தெரியாது. மிசா, எமர்ஜென்சியை பார்த்த திமுக இதற்கெல்லாம் பயப்படாது.

ஜாலியாக ரோட்-ஷோ

சொல்லி அடித்தது போல் தஞ்சாவூர் செல்வதற்கு முன் நீதிமன்றம் மூலம் கைது நடவடிக்கையை தடுத்தது வழக்கறிஞர் அணி தான். ஜாலியா ட்ரிப் செல்வது போல், ரோடு ஷோ வாக தான் சென்றோம். அரசின் மூலம் எந்த செலவும் இல்லாமல் ரோடு ஷோ நடத்தினோம். தேர்தலுக்கு பிறகு சற்று சோர்ந்து போய் இருந்த நாம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளோம். நாளை சட்டமன்றத்தில் என்னென்ன கூத்தடிக்க உள்ளனர் என தெரியவில்லை.  இந்த 100நாட்களில் என்னை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், திமுக ஜென் ஸி இளைஞர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோபா மாடல் அரசுக்கு நம்முடைய சட்டத்துறையை பற்றி தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது,  குறிப்பாக எதிர்கட்சியாகவே இல்லாத போது,  முதலமைச்சரையே ஊழல் வழக்கில் சிறைக் அனுப்பிய துறை திமுக சட்டத்துறை.

இதையும் படியுங்கள்: Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?

அமைச்சர்கள் மீது சாடல்

யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என மக்களுக்கு தெரியவில்லை. லாட்டரி விற்ற, திருட்டு விசிடி விற்ற, உருட்டுகட்டை, பவுடர் போடுற அமைச்சர் யாரு?  அமைச்சர்களின் பெயரை விட பட்டப்பெயர் வைத்து சொன்னால் தான் மட்டும் தெரிகிறது. இன்னும் வரும் காலத்தில் அடுத்தடுத்து தவெக அமைச்சர்கள் பெயில் வாங்கும் நிலைக்கு வருவார்கள். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக ஆளுங்கட்சி தரப்பிலே புகார் கொடுக்கப்பட்டுள்ளது வெகு விரைவில் அவர்கள் மாட்டுவது உறுதி. இதை ஆதாரத்துடன் நாம் வெளியே கொண்டு வர வேண்டும். அதிகாரம் இருக்கும் திமிரில் ஆளுங்கட்சியினர் உள்ளனர். மக்கள் விரோத அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை, மீண்டும் நம் தலைவரை முதலமைச்சராக ஆக்கும் வரை தொடர்ந்து நாம் பணியாற்ற வேண்டும்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks