அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 பேரில் 4 பேருக்கு கட்சி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவெகவினரிடையே விவாதமாக மாறியுள்ளது.

தவெகவுக்கு வந்த அதிமுகவினர்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக, அதிமுக மட்டுமல்ல களத்தில் இருந்த எந்த கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவர்கள் எங்கே ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள், ஒரு சீட் ஜெயித்தாலே பெரிது என வெளிப்படையாகவே ஏளனம் செய்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக அமைய அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானார்.

பெரும்பான்மை இல்லாத தவெகவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தது. அதேசமயம் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. இப்படியான நிலையில் அதிமுகவில் தேர்தல் முடிவுகளால் பிளவு ஏற்பட்டது. அக்கட்சி தங்கள் பரம எதிரியான திமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி சிந்தித்ததாக கூறி 2026 தேர்தலில் வெற்றி பெற்ற 6 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

அவர்களோடு சேர்த்து இந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தொடங்கி மேயர், கவுன்சிலர் வரை அதிமுகவில் இருந்து தவெகவுக்கு படையெடுத்தனர்.

கட்சி பதவிகள் வழங்குவதில் தாமதம்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில் அக்கட்சி முழுமையான கட்டமைப்பை இன்னும் பெறவில்லை. அதேசமயம் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வந்தவர்களுக்கு கூட உருப்படியாக பதவி கொடுக்கவில்லை என அதிமுக சாடியது. இப்படியான நிலையில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை கடக்கவுள்ளது. அதேசமயம் இன்னும் 6 மாத காலத்தில் உள்ளாட்சி தேர்தலும் வரவுள்ளது. இதனால் தவெகவை பலப்படுத்தும் பொறுப்பில் தலைமை இறங்கியுள்ளது.

அந்த வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமைப்புச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர், இசக்கி சுப்பையா தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர், மரகதம் குமரவேல் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் தாராபுரம் மற்றும் பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிகள் ஒதுக்கப்படவில்லை.

மேலும் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் ஒதுக்கப்படுவது தவெகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே எல்லாம் உண்டு என சொல்லி விட்டு, தற்போது புதிதாக வந்தவர்களுக்கு இப்படி பதவிகளை வழங்குவது நியாயமா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர். அத்தகைய அதிருப்தி நபர்களை சமாதானம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Source: Read Full Article