அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீர்வழிப்பாதையை "புதிய அமெரிக்கப் பிரதேசம்" என்று குறிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அது தொடர்பான தனது கூற்றை தீவிரப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே நடைபெற்ற 60 நாள் பேச்சுவார்த்தைக் காலம் முடிவடைந்த பின்னரும், பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கான எந்த அறிகுறியையும் இரு தரப்பினரும் காட்டாத நிலையிலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த பதிவு வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் தொடர்பாக ட்ரம்ப்பின் வரைபடப் பதிவு

பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில், ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே உள்ள குறுகிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி ஒரு வட்டம் வரையப்பட்டு, அதன் குறுக்கே “புதிய அமெரிக்கப் பிரதேசம்” என்ற வார்த்தைகள் ட்ரம்ப்பின் பதிவில் காட்டப்பட்டுள்ளன.

ட்ரம்புக்கு ஈரான் தரமான பதிலடி

ட்ரம்ப்பின் இந்த பதிவைத் தொடர்ந்து, ஈரானிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி, ட்ரம்பின் பதிவை விமர்சித்ததுடன், அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை மீதான அமெரிக்க அதிபரின் கூற்றுகள் விரைவில் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

"விரைவில், ஹார்முஸ் ஜலசந்தி குறித்த ட்ரம்பின் பிரமை சரிசெய்யப்படும் அல்லது இந்த பிரமை பிடித்த மனிதனின் பிரமைகளை நாங்கள் சரிசெய்வோம்," என்று கரிபாபாடி தனது பதிவில் கூறியுள்ளார்.

همانطور که ترامپ نام خلیج همیشگی فارس را به صورت صحیح نوشت، به زودی توهمش درخصوص تنگه هرمز یا اصلاح می شود یا توهمات این متوهم را اصلاح خواهیم کرد. pic.twitter.com/gpxqnGK077

— Gharibabadi (@Gharibabadi) August 18, 2026

ஈரானுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என மீண்டும் பதிவிட்ட ட்ரம்ப்

இதைத் தொடர்ந்து, மற்றொரு பதிவை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசுடன் எந்த பேச்சுவார்த்தைகளோ, உரையாடல்களோ நடைபெறவில்லை அல்லது திட்டமிடப்படவில்லை. கடற்படை முற்றுகை முழு வீச்சில் அமலில் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறந்தும் இயங்கிக்கொண்டும் இருக்கிறது. அனைத்து நீர் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன.“ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஹார்முஸை குறி வைத்த ட்ரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது என்று தொடர்ச்சியாக கூறிவந்த கருத்துக்களைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது சமீபத்திய பதிவை வெளியிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, அந்த நீர்வழியை விரைவில் “அமெரிக்காவின் பிராந்தியமாக” அறிவிக்கக்கூடும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும், அந்த நீர்வழிப்பாதையின் மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்த நீர்வழியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதாகவும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.

அந்த கூற்றுகளை ஈரான் நிராகரித்தது. ஹார்முஸ் ஜலசந்தி "ஈரானியமானது, ஈரானியமாக இருக்கிறது, ஈரானியமாகவே நீடிக்கும்" என்றும், அதைத் திறப்பதும் மூடுவதும் ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் கரிபாபாடி முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article