சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 5 முக்கிய ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு இந்த ரயில்கள் எழும்பூர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்தும், வட மாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இருக்கும் நிலையில் அவ்வப்போது இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்போதெல்லாம் சில ரயில்கள் சேவை மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் 5 முதல் 21ம் தேதி வரை சில குறிப்பிட்ட ரயில்கள் எழும்பூர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<iframe title="Vanni Arasu interview | ”பாஜக தயவில் தவெக அரசா? பதவி விலக கூட தயார்” வன்னி அரசு பரபரப்பு INTERVIEW" src="https://www.youtube.com/embed/kvOXPCC7e4g" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

ரயில் சேவையில் என்னென்ன மாற்றம்?

பரமாரிப்பு நடக்கும் நாட்களில் இந்த ரயில்கள் சென்னை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரம் அல்லது மாம்பலத்தில் தங்கள் பயணத்தை முடித்துக்கொள்ளும் அல்லது அங்கிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05.08.2026 முதல் 19.08.2026 வரை தஞ்சாவூரிலிருந்து புறப்படும் ரயில் எண் 16866 தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண் 16160 மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

கொல்லத்திலிருந்து புறப்படும் ரயில் எண் 20636 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் விரைவு ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.

சேலத்திலிருந்து புறப்படும் ரயில் எண் 22154 சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.

திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்படும் ரயில் எண் 12654 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் ராக்ஃபோர்ட் விரைவு ரயில், மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண் 16865 சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 23:00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 16159 சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 23:40 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 20635 சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 20:20 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12653 சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் 2026 ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 21 வரை நள்ளிரவு 12:05 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

Source: Read Full Article