மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை, கடந்த இரு வார காலமாகவே, மாலை தொடங்கி மறுநாள் காலை வரை அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இன்றைய நாளில் என்ன மாதிரியான வானிலை நிலவரம் இருக்கும் என்பதைக் காணலாம்.

வானிலை மையத்தின் அறிக்கை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக, செங்கல்பட்டு மாவட்டம், வி.ஐ.டி கல்வி நிறுவன பகுதியில், 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை சோழிங்கநல்லுார், ராணிப்பேட்டை பகுதிகளில், தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.

வளி மண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை

தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளைய வானிலை நிலவரம்

இதேபோல், நாளை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில், இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை, ஜூன் 1 முதல், ஆக., 22 வரையிலான காலக்கட்டத்தில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவை விட 18 செ.மீட்டர், அதாவது, இயல்பை விட 17 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article