TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!

TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
News Image

TN Govt Family Debt: தமிழ்நாடு அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநிலம் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக குடும்பங்களின் மீதான கடன் சுமை:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை சுமார் 10 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, மாநிலத்தில் ரேஷன் கார்ட் கொண்டிருப்பவர்களுக்கு மானிய விலையில் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு அவ்வப்போது இயற்கை பேரிடருக்கான நிதியுதவி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் பெரும்பாலான குடும்பத்தினர் ரேஷன் கார்ட்களை வாங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 28 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதனடிப்படையில், மாநில அரசின் கடனை ஒவ்வொரு குடும்பத்திற்கான கடனாக பிரித்தால், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 28 லட்சம் குடும்பங்கள் மீது தலா சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அரசு கடனாக வாங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் மொத்த கடன்

பொதுக்கடன்களை பொறுத்தமட்டில் தமிழ்நாடு அரசு 2026-27 நிதியாண்டில் மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறவும், 51,971 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. பொது கணக்கின் கீழுள்ள பொறுப்புகளும் பொதுக் கடனுடன் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன. 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த நிகர பொதுக்கடன் மற்றும் பொது கணக்கு பொறுப்புகள் 1,21,653 கோடி ரூபாய், 2026-27 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,20,964 கோடி ரூபாயாக உள்ளது. இதன் விளைவாக, 31 மார்ச் 2027ஆம் நாளில் நிலுவைப் பொறுப்புகள் 10 லட்சத்து 98 ஆயிரத்து 768 கோடி ரூபாயாக இருக்கும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வருவாய் விவரங்கள்

தமிழ்நாடு அரசின் செலவினமானது 2026-27 நிதியாண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 802 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்,

ஊதியங்களுக்கான செலவினம்  2026-27 நிதியாண்டில் 91 ஆயிரத்து 32 கோடி ரூபாய்

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நலன் செலவுகளுக்காக 2026-27 நிதியாண்டில் 41 ஆயிரத்து 846 கோடி ரூபாய்

ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக 19 ஆயிரத்து 698 கோடி ரூபாய்

மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான செலவினம் 2026-27 நிதியாண்டில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 494 கோடி ரூபாய்

முந்தைய ஆண்டுகளில் திரட்டப்பட்ட பொதுக் கடனுக்கான வட்டிக்காக 2026-27 நிதியாண்டில் 78 ஆயிரத்து 683 கோடி ரூபாய் அடங்கும்.

இதையும் படியுங்கள்: TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்

வருவாய் & நிதிப்பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை என்பது 2026-27 நிதியாண்டில் 55 ஆயிரத்து 775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் 2026-27ல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறையின்விகிதம் 3.00 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் வசூல் திறன் உள்ளிட்ட வருவாய் பெருக்க நடவடிக்கைகளின் விளைவாக, இது 2027-28ல் 53,933 கோடி ரூபாயாகவும், 2028-29ல் 51,058 கோடி ரூபாயாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks