TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்

TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
News Image

TN Cabinet Reshuffle CM Vijay: தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக சிலருக்கு வாய்ப்பளிக்கவும் முதலமைச்சர் விஜய் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்கள்:

தனது அமைச்சரவை சகாக்களின் செயல்பாடுகள் தொடர்பான தரவுகளை உளவுத்துறை மூலம் சேகரித்த முதலமைச்சர் விஜய், விரைவில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள உள்ளாராம். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் அமைச்சரவையில் இருந்தே நீக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் சிலருக்கான இலாகா மாற்றமும் எதிர்பார்க்கப்படுகிறதாம். அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதோடு, குறைவான செயல்திறனை கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, தரவுகளை சேகரித்து இந்த அதிரடி மாற்றங்களுக்கான பணிகளை முதலமைச்சர் விஜய் முன்னெடுத்துள்ளாராம்.

நீக்கப்பட வாய்ப்புள்ள 4 அமைச்சர்கள்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, தவெகவைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் மற்றும் மகளிர் நலன் மேம்பாட்டு அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாம். இதுபோக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர்கல்வி அமைச்சரான விஸ்வநாதனின் பதவியும் பறிபோக அதிக வாய்ப்புள்ளதாம்.  தலைமையின் தொடர் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் விஸ்வநாதன் மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றனவாம் கட்சித் தொண்டர்கள் சம்பந்தப்பட்ட வன்முறை மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுடன் ஜெகதேஸ்வரி தொடர்பில் இருந்ததாகவும், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சரத்குமாரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 பேருக்கு இலாகா மாற்றம்

பதவி பறிப்புக்கு மத்தியில் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாம். அதன்படி, தவெகவைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் கமலி ஆகியோருடன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்குமாரின் இலாகாக்கள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகச் செயல்பாடு மற்றும் துறைகளை கையாளும் விதம் அடிப்படையில் சொந்த கட்சி அமைச்சர்களுக்கான இலாகாக்களை மாற்றவும், சுற்றுலா துறையை விட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஒதுக்கும் வகையில் ராஜேஸ்குமாரின் மாற்றம் இருக்கும் எனவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசிகவின் வன்னியரசும் வலுவான இலாகாவை எதிர்பார்ப்பதாகவும், இறுதி முடிவு முதலமைச்சர் விஜய் வசம் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TVK Vs DMK: "கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?

தீவிர முனைப்பில் EX. அதிமுகவினர்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் முழுக்க முழுக்க செயல்திறன் சார்ந்ததாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு இரண்டாவதாக மேற்கொள்ளப்படும் மாற்றம் முழுக்க அரசியல் சார்ந்ததாக இருக்குமாம். அப்போது தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமாம். அந்த வகையில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், நீதிமன்ற உத்தரவு காரணமாக, 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்ந்து தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks