TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!

TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
News Image

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆனந்த்  முதலமைச்சர் விஜய் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல் பற்றி வேதனையுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயப்படுறீங்களா ஆனந்த்?

சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆனந்த் பதிலளித்தார். கடைசியாக பல துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது,ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்டால் எங்கள் முதலமைச்சர் விஜயை சொல்வேன். ஒரு நேரத்தில் ஏன்டா இவரு அரசியலுக்கு வந்தாருன்னு நான் நினைப்பேன். ஒரு  சீட், 2 சீட், 5 சதவிகிதம் என அவரை இளக்காரமாக பேசினார்கள். அதிலும் யூட்யூப், டிவி சேனல்களில் வாடகை வாய்கள் எல்லாம் என்னென்ன பேசணுமோ பேசினார்கள். படம் பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணே என என்னிடம் விஜய் சொல்வார். எங்களுடன் இருப்பவர்கள் இதை விடக்கூடாது என சொன்னாலும் வேண்டாம் என மறுப்பார்.

மக்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்தார். பெரிய பெரிய கட்சி கூட்டணி எல்லாம் வைக்கிறார்களே, நாம தனியா நிற்கிறோமே என கேட்டேன். நம்ம தனியா தைரியமாக நிற்போம் ஜெயிப்போம் என சொன்னார். உங்களுக்கு பயமாக இருக்கிறதா என விஜய் கேட்டார். தமிழ்நாட்டு மக்கள் என்னை சினிமாவில் உச்சத்தில் வைத்தார்கள். அப்படி இருக்கும்போதே நான் அரசியலுக்கு வர நினைக்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு வர நினைக்கவில்லை.

சீட் வழங்குவதில் நடந்த மாற்றம்

தவெகவில் மாவட்டச் செயலாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கினோம். அதில் சிலர் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் கைகாட்டும் ஆளுக்கு கொடுங்கள் என சொன்னார்கள். இருந்தாலும் டெபாசிட் மட்டும் நீ கட்டு, மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறினோம். எனினும் மறுத்தார்கள்.

விசில் சின்னத்திற்கு ஓட்டு மட்டும் கேளு என சொல்லியும் மற்றவர்களை பரிந்துரை செய்தார்கள். தவெக எம்.எல்.ஏ.க்களில் 80 சதவிகிதம் பேர் ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்களுக்கும், 20 சதவிகிதம் பேர் மாவட்டச் செயலாளர்களால் பரிந்துரை செய்யப்பட்டும், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். யார் விஜயை நம்பி வருகிறார்களோ அவர்களை ஒருகாலமும் கைவிட மாட்டோம்.

உண்மையாகவே ஒரு மனிதனை எப்படியெல்லாம் புண்படுத்த வேண்டுமோ அப்படியெல்லாம் அவரை செய்து விட்டார்கள். சர்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அது சரிதான் என நினைக்கும் அளவுக்கு அதிமுகவில் இருக்கும் உறுப்பினரே சிரிக்கிறார். எங்களுக்கு எல்லாம் தெரிந்தது விஜய் மட்டும் தான். தி.நகர் தொகுதியில் நான் 4 நாட்கள் மட்டுமே பரப்புரை மேற்கொண்டேன். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 3 மாதங்களில் ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு என்னவெல்லாம் பேசுகிறீர்கள். யாரோ ஒருவர் ஆன்லைனில் உறுப்பினர் கார்டு எடுத்தால் போது தவெக உறுப்பினர், நிர்வாகி இதை செய்கிறார், அதை செய்கிறார் என நியூஸ் போட வேண்டியது. ஆனால் நாங்கள் மக்களுக்கும், விஜய்க்கும் கெட்ட பெயர் ஏற்படாதவாறு நடந்துக் கொள்வோம்” என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks