CM Vijay Amit Shah: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, முதலமைச்சர் விஜய் பையில் வைத்து கொடுத்த பரிசு என்ன? என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது.

அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய்

தென்மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு தலைமை தாங்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவே சென்னை வந்தடைந்தார். தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வரவேற்றார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உள்துறை அமைச்சரை விஜய் சந்தித்தது இதுவே முதல்முறையாகும். சிறிய கலந்துரையாடலுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து இரவு உணவருந்தினர்.

அமித் ஷாவிற்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?

சந்திப்பின் போது அமித் ஷாவிற்கு பொன்னாடை மற்றும் மலர் கூடையை வழங்கிய முதலமைச்சர் விஜய், மூடிய பையில் வைத்தபடி பரிசு ஒன்றையும் வழங்கினார். அந்த பரிசு என்னவாக இருக்கும்? என்ற சந்தேகமும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சிலர் அது அமித் ஷாவிற்கு பிடித்த உணவாக இருக்கலாம் என்கின்றனர். சிலர் அது தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொருளாக இருக்கக் கூடும் என தங்களது எண்ணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் முக்கிய பிரமுகர்கள்

அங்கு நட்சத்திர விடுதிக்கு அமித் ஷாவை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக் கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர். இதுபோக கேரள மாநில முதலமைச்சர் சதீஸன் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் இன்று சென்னை வந்தடைய உள்ளனர். காலை 10 மணியளவில் தென்மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

#WATCH | Chennai | Union Home Minister Amit Shah met Tamil Nadu CM C Joseph Vijay, ahead of the 31st Meeting of the Southern Zonal Council on 20th August in Kovalam, Chengalpattu. pic.twitter.com/xGQs90nvnT

— ANI (@ANI) August 19, 2026

காவிரி விவகாரம்:

தென்மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகளை சுமூகமாக பேசி முடிக்கவும், நிர்வாகங்களுக்கு இடையே நல்ல உறவை பேணவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகா உடனான காவிரி நீர் விவகாரம் தொடர்பாகவும் இன்று ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடத்தப்படலாம். தொடர்ந்து, அமித் ஷா தலைமையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, டி.கே. சிவக்குமாருடன் தனிப்பட்ட முறையிலும் முதலமைச்சர் விஜய் இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article