TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?

TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு?  அசெம்ப்ளியில் அறிவிப்பு?
News Image

CM Vijay On TASMAC: டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் முடிவு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்குள்ளாகவே அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி பானியில் முதலமைச்சர் விஜய்:

முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் கணிக்க முடியாத பல அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் விஜய் மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சட்டப்பேரவையில்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்தது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கார், மகளிருக்கு இலவச பேருந்து, ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கு 3 மானியம் என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக திமுகவின் முக்கிய கனவு திட்டமாக கருதப்பட்ட பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவதாக அறிவித்து பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தினார். இந்நிலையில், அடுத்ததாக என்ன அதிரடி முடிவை முதலமைச்சர் வெளியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் அடுத்த அறிவிப்பு டாஸ்மாக் குறித்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

தலைவலியாய் தொடரும் டாஸ்மாக்..!

கடந்த 2000களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் போலி மதுபானங்கள் மற்றும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயக் கொடுமையால் பல நூறு பேர் உயிரிழந்தனர். இதனால் தரம் உறுதிபடுத்தப்படுவதோடு, கள்ளச்சாராயப் புழக்கமும் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறி, அரசே மதுபான சில்லறை விற்பனையை கையிலெடுத்தது.  இது பெரும் பிரச்னைக்கான தீர்வாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தமிழக அரசு நிர்வாகத்திடம் டாஸ்மார்க் கடை  வந்த பிறகுதான் மிகப்பெரிய அளவில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. கூடுதல் விலைக்கு மது விற்பனை, கள்ளச் சந்தையில் மது விற்பனை, போலி மது விற்பனை என தொடர்ச்சியாக புகார்கள் வந்தது. அரசே மதுபானங்கள் விற்பதால் பெண்கள் மத்தியில் அரசு மீது தொடர்ந்துஅதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு மீண்டும் டாஸ்மார்க் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு ஆலோசித்து வருகிறது.

தனியார்மயமாக்க தவெக அரசு திட்டம்:

மதுபான சில்லறை விற்பனையை கைவிட்டு, தனியாரிடம் ஒப்படைப்பதால் கூடுதல் கட்டணம், பெண்களிடையே அவப்பெயர்கள் போன்ற தர்மசங்கடமான சூழலை தவிர்ப்பதோடு வருமானமும் குறையாமல் பார்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறதாம். அரசு நேரடியாகக் கடைகளை நடத்துவதற்குப் பதிலாக, ஏல முறை அல்லது குறிப்பிட்ட உரிமக் கட்டணங்கள் மூலம் தனியாருக்குக் கடைகளை ஒதுக்கலாம் என ஆலோசிக்கிறதாம். இதனால் அரசுக்கு ஒரே நேரத்தில் பெரிய அளவிலான முன்பண வருவாய் கிடைக்கிறது.  மதுபானங்கள் மீதான கலால் வரி  மற்றும் கூடுதல் வரிகள் மூலம் அரசுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். கடைகளைத் தனியாரே நடத்துவதால், நிர்வாகச் செலவுகள் இன்றி அரசுக்குத் நிகர லாபம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுகள் ஏற்கனவே மதுவிற்பனையை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Udhaynidhi Stalin: கொளத்தூர் தோல்விக்கு என்ன காரணம் சொல்ல? ஸ்டாலின் போட்ட பிச்சை - உதயநிதி பேச்சு

பயனர்களுக்கு எதிரான சுரண்டல்கள் குறையும்

தனியார் கடைகளில் வணிகப் போட்டி இருப்பதால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாது. மதுபானக் கொள்முதல், டெண்டர் மற்றும் கடைகளின் நிர்வாகத்தில் நடக்கும் உள்ளூர் அரசியல் தலையீடுகள் மற்றும் கமிஷன் முறைகேடுகள் பெருமளவு குறைக்கப்படலாம்.  பில்லிங் முறைகள் துல்லியமாக இருக்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (UPI/Card) எளிதாக்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை:

தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க கடைகளைத் தூய்மையாகவும், குளிர்சாதன வசதி  போன்ற நவீன உள்கட்டமைப்புகளுடனும், அழகிய வடிவமைப்பிலும் பராமரிக்க வாய்ப்புண்டு. அரசு கடைகளில் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே விற்கப்படுவதாகப் புகார்கள் உள்ளன. தனியார் கடைகளில் நுகர்வோரின் தேவைக்கேற்ப ப்ரீமியம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு ப்ராண்டுகள் தடையின்றி விற்பனைக்குக் கிடைக்கும். டாஸ்மாக் எனும் ஒற்றை நிறுவனமாக இல்லாமல், பல தனியார் நிறுவனங்கள் போட்டி போடுவதால் சேவையின் தரம் உயரும். உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே, மதுபான சில்லறை விற்பனையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜயே கூட இந்த முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks