கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!

கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
News Image

விழுப்புரம்: தமிழ்நாடு அரசின் 'தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்' (TANFINET) சார்பில், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்காக மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 54 வருவாய் கோட்டங்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டளர்களை  (District Level Franchisee Partners DLFP) பணிகளை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது சுமார் 97% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துணைப் பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டம் மற்றும்/அல்லது அவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) Optical Network Terminal (ONT) , தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும். விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதள போர்டல் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை (Division) தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ₹2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர் TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.

பாரத்நெட் திட்டத்தின்கீழ் இறுதி கட்ட இணைய இணைப்பு (Last Mile Connectivity) சேவைகளை, வருவாய் பகிர்வு அடிப்படையில் வழங்குவதற்காக மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 01.01.2026ஆம் தேதியன்று TANFINET இணையளத்தில் வெளியிடப்பட்டது. சில நிருவாகக் காரணங்களுக்காக, மேற்படி, அறிவிப்பில் நிதி தகுதி நிபந்தனைகள் திருத்தப்பட்டு அனைத்து வருவாய் உட்கோட்டங்களிலிருந்தும் (Revenue Division) 10.03.2026 முழுமையான விண்ணப்பங்களை பெறும் நோக்கில் மீண்டும் அறிவிப்பு வெளியாகி 04.05.2026 வரை செயல்முறைபடுத்தப்பட்டது.

தற்போதைய நிலைவரப்படி, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் பாரத்நெட் கட்டம் [[ன்கீழ் இறுதி கட்ட இணைய இணைப்பு சேவைகளை (Last Mile Connectivity) வழங்குவதற்காக வருவாய் பகிர்வு அடிப்படையில் மாவட்ட அளவிலான தொழில்பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்ய 54 வருவாய் கோட்டங்களுக்கு மீண்டும் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு (Re-Notification) 12.08.2026 முதல் TANFINET இணையதளத்தில் திறக்கப்படுகிறது. 54 வருவாய் கோட்டங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வருவாய் கோட்டம் அடங்கும்.

மேலும், ஏற்கனவே விழுப்புரம் வருவாய் கோட்டத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களுக்கான TANFINET இணையதள போர்டல் 12.08.2026 4 26.08.2026 மாலை 6.00 வரை செயல்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 044 24965595 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks