Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு

Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
News Image

ரேஷன்கடைகளில் உணவுப்பொருட்கள்

தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த கார்டுகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடையில் தற்போது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப கோதுமையானது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கோதுமை தரமானதாக இல்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு பாக்கெட்டில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் ரேஷன் கடையில் வரும் நாட்களில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்கள்

இது தொடர்பாக பொது விநியோகத் திட்டம் தொடர்பான அறிவிப்பில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தினருக்கு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை இந்த அரசு விரிவுபடுத்தி செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் 7.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பாக்கெட்டில் கோதுமை மாவு

அடுத்ததாக பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் உரிய அளவிலும், தரமான முறையிலும் பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், இந்த ஆண்டில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்திற்காக 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

மேலும் உணவு மானியத்திற்காக இந்த அரசு 14,000 கோடி ரூபாய் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks