RS Bharathi: 6 மாசம் டைம்.. திமுக பலம்பெறும்.. தவெக ஆட்சி கவிழும்.. விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!

RS Bharathi: 6 மாசம் டைம்.. திமுக பலம்பெறும்.. தவெக ஆட்சி கவிழும்.. விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
News Image

2027ம் ஆண்டு மே மாதத்திற்குள் மீண்டும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் சூழலை தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஒரு 100 நாளாக சோர்வாக இருந்த தொண்டர்கள் எல்லாரையும் சூடேற்றும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய ஒவ்வொருவரும் உணர்ச்சிமயமாக பேசினார்கள். இதுதான் திமுக என்பதை எதிரிகள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். கலைஞர் கருணாநிதி அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார். என் தம்பி தூங்கினால் கும்ப கர்ணன், எழுந்தால் இந்திரஜித் என குறிப்பிடுவார். இன்றைக்கு திமுகவினர் இந்திரஜித் ஆக மாறியுள்ளார்கள்.

துரைமுருகனை நான் 63 ஆண்டுகாலமாக அறிவேன். திமுகவில் அசையாமல் அன்று முதல் இன்று வரை இருக்கக்கூடியவர் நானும் அவரும் மட்டும் தான். நாங்கள் இருவரும் எம்ஜிஆரால் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டோம். அவர் அதிமுகவை உருவாக்கியபோது நாங்கள் இரண்டு பேரும் தான் போகவில்லை. நான் 10ம் வகுப்பு படித்த காலத்தில் இருந்தே எனக்கும், துரைமுருகனுக்கும் தொடர்புண்டு.

இங்கு பேசிய கதிர் ஆனந்த் எம்பி உள்ளிட்டோர் கொஞ்சம் ஆவேசமாக பேசினர். வந்தவர், போனவர், இந்த ஊருக்கு சம்பந்தமில்லாதவர் எல்லாம் பேசும்போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும். காட்பாடியை அங்குலம் அங்குலமாக செதுக்கியவர் துரைமுருகன். இதை யாரும் மறுக்க முடியாது. அவரை தோற்கடித்தவரை யாருக்கும் தெரியாது.

முதலமைச்சர் விஜய் என் மேஜை மீது ஆய்வு செய்யப்பட்ட 3 துறை ஃபைல் உள்ளது என கூறினார். தவெகவில் ஒன்று தெரியாவர் தான் எம்.எல்.ஏ., அமைச்சராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தில் தணிக்கை செய்யப்பட்ட ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும். அதனைத் தான் விஜய் சொன்னார்.

விஜய் அந்த ஃபைலை திறக்கட்டும். நானும் அடுத்த ஃபைலை திறக்கிறேன். ஊழலே முதலமைச்சர் அறையில் இருந்து தான் தொடங்கியது. முதலமைச்சர் அறையை சீர் செய்ய டெண்டர் விடாமல் வேலை நடந்திருக்குது. இப்படி பல ஊழல் நடந்திருக்கிறது. ஒரு தேர்தலில் தோற்றால் திமுக அழிந்து விடுமா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செயற்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் பற்றி அறிவித்துள்ளார். அதற்கு ஒரு 6 மாதங்கள் ஆகும். தேர்தல் முடித்து வந்தவுடன் பார்த்தால், தவெக ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. தானாக இந்த ஆட்சிக்கு முடிவு வரும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சி சொரணை இருந்தால் வெளியே வரும். இன்னும் 2, 3 கட்சிகள் வாபஸ் வாங்கி விட்டால் தவெக நிலைமை என்னவாகும். இந்த 6 மாத காலத்திற்குல் நாம் திமுகவை பலப்படுத்தி விடுவோம். 2027 மே மாதத்திற்குள் தமிழ்நாடு நிச்சயமாக சந்திக்கும் சூழலை தவெக உருவாக்கும்  என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks