சீன எல்லைக்கு அருகில் உள்ள நேபாளத்தின் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெரும் வெள்ளம், பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 36 பெண்கள் உட்பட 57 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வடக்கு நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு, எல்லைப் பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீர் திபெத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

VIDEO | Nepal: Devastating flash flood causes major damage to markets and hydropower projects in Rasuwa region. More details are awaited.#NepalNews #NepalFlashFlood

(Source: Third Party)

(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/QQmU1advuw

— Press Trust of India (@PTI_News) August 26, 2026

இந்த வெள்ளப்பெருக்கால், நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் மொத்தம் 105 இந்தியர்களை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடித்துச் செல்லப்பட்ட நீர்மின் நிலையங்கள்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு, ரசுவகதி மற்றும் சிலிமே உள்ளிட்ட பல நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்றது. நேபாள மின்சார ஆணையத்தின்படி, ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 13 முதல் 14 நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால், அவற்றின் மொத்தத் திறன் 748 மெகாவாட்டாகக் குறைந்தது.

57 தமிழர்களின் கதி என்ன.? உதவி எண்கள் அறிவிப்பு

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில், அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகதாகவும், 2 பேருந்துகளில் சென்ற எஞ்சியுள்ள 37 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து அறிய, தமிழக அரசின் அயலகத் தமிழர் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான உதவி எண் - 1800 309 3793

வெளிநாடு உதவி எண்கள் - +91 8069009901

மிஸ்டு கால் அழைப்புக்கு +91 8069009900

மேற்கண்ட எண்களை தொடர்புகொண்டு, நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு, பொதுமக்களை மீட்டு வருகின்றனர். இந்த திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளத்தில் ஏராளமான ரோடுகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.

Source: Read Full Article