Nepal Flood Death Toll: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை, 288 இந்தியர்கள் உட்பட ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை 392 ஆக உயர்வு

நேபாளம்-திபெத் பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, வியானன்று நள்ளிரவு நேரப்படி 389 ஆக பதிவாகியுள்ளது. போடே கோஷி - த்ரிசூலி பிராந்தியத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது. திபெத் பிராந்தியத்தை சேர்ந்த 3 பேரும் இந்த வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என சீனா அறிவித்துள்ளது. இதனால், கடந்த 26ம் தேதி நிகழ்ந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 392 ஆக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.

1,468 பேர் எங்கே?

தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய கணக்கீட்டின்படி. நேபாளத்தில் 910 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது தொடர்பில் இல்லை. இதில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 288 இந்தியர்களும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் தேசியம் வாரியான விவரங்களை நேபாளம் வெளியிடாததால், இந்தியர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்ற தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை. எல்லையைக் கடந்து திபெத்தில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி 558 பேர் காணாமல் போனதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதிலும் நாடு வாரியான விவரங்களை வெளியிடாததால், காணாமல் போனோர் பட்டியலில் எத்தனை இந்தியர்கள் அல்லது பிற நாட்டு குடிமக்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனால் சுமார் 200 இந்தியர்கள் திபெத்தில் சிக்கியுள்ளனர். நேபாளத்தில் உள்ள, தொடர்பு கொள்ள முடியாத 288 இந்தியக் குடிமக்களில், திரிசூல்-1 நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் 73 பேரும் அடங்குவர் என வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 இந்தியர்கள் மீட்பு

இதனிடையே, நேற்றைய நள்ளிரவு தகவல்களின்படி ஒட்டுமொத்தமாக 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் 63 பேர் திரிசூல்-1 நீர்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தவர்களாகவர். மேலும் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவார்களாவர். இந்தியவை சேர்ந்த 5 யாத்ரீகர்களின் குழுக்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 61 பேர் கொண்ட குழு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மற்றும் 49 பேர் கொண்ட இரு குழுக்கள், கேரளாவைச் சேர்ந்த 33 பேர் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 32 பேர் அடங்கிய குழுக்கள் ரசுவாவில் காணாமல் போயுள்ளனர்.

சாலைகளே இல்லாத நிலையில் தேடும் பணிகள்:

காணமல் போனவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளம் சாலைகளையும் பாலங்களையும் அழித்து, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளைத் துண்டித்து, மேல் பள்ளத்தாக்கில் உள்ள குடியிருப்புகளைத் தனிமைப்படுத்தியதால், தேடுதல் குழுக்கள் கடுமையான அணுகல் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களை அடையாளம் காண குடும்பத்தினரை அணுகுவதும் சிக்கலாகியுள்ளது. இதனிடையே, மீட்கப்பட்டவர்களுகு தற்காலிக முகாம்களில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றா. காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பங்கள் காணாமல் போன உறவினர்களைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், நேபாள காவல்துறை அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களின் ஆன்லைன் தரவுத்தளத்துடன் இணைக்கும் QR கோட் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Source: Read Full Article