Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?

Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
News Image

Nepal Flood Rescue: நேபாளம் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது.

1,643 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர்:

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போன நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம், எதிர்பாராத நேரத்தில் அரங்கேறிய இந்த இயற்கை பேரிடரின் போது பல நிஜ உலக நாயகர்களால் ஏராளமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் நொடி நேரத்தில் ஆசிரியர் எடுத்த ஒரு முடிவால் ஆயிரத்து 643 மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பொங்கி எழுந்த பெரு வெள்ளம் - நொடி நேர முடிவு

திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு, புதன்கிழமை காலை 9:20 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் வெள்ள பாதிப்பு தொடர்பான எச்சரிக்கையை வழங்கியுள்ளார். பாறை, பனி, மண் மற்றும் இடிபாடுகளின் வெள்ளத்தால் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் ஏற்கனவே அடித்துச் செல்ல தொடங்கியிருந்தன. வெள்ள நீர் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த நிலையில், 47 வயதான ஆங்கில ஆசிரியர் தாவடிக்கு அடுத்து என்ன செய்வது என்ற முடிவை எடுக்க சில நிமிடங்களே இருந்தன. நுவாகோட்டில் உள்ள பள்ளியில் இருந்த அந்த குழந்தைகளுக்கு அன்று காலை அவர் தான் பொறுப்பாளராக இருந்தார். வெள்ள பாதிப்பு குறித்து செய்தியை அறிந்த போதிலும், பள்ளி பாதுகாப்பாகவே இருக்கும் என ஆரம்பத்தில் நினைத்துள்ளார். கான்கிரீட்டால் கட்டப்பட்டு, ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்த அந்த பள்ளி, கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் எஃகு பாலத்தின் அதே மட்டத்தில் அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Digno de admiración.
Rajendra Dadabhai, director de la escuela secundaria Tribhuvan Trishuli, del poblado Battar, en Nepal, salvó la vida de 1,643 estudiantes, maestros y personal escolar. al reaccionar y actuar rápido ante la emergencia de la inundación catastrófica.
Dadabhai,… pic.twitter.com/8pvudiFZMx
— Felipe GómezMartínez (@felipegomez1960) August 30, 2026

1,643 மாணவர்கள் காப்பாற்றப்பட்டது எப்படி?

அப்போது பள்ளிக்கு வந்த ஒரு குழந்தையின் பெற்றோர் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக எச்சரித்துள்ளார். இதையடுத்து தாவாடி உடனடியாக பள்ளி மணியை அடித்து, வகுப்பறைகளைக் காலி செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.  பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களை அழைத்து, ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் திரும்பிச் செல்லுமாறு கூறினார். ஆனால், அதற்குள் அங்கிருந்து பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே குழந்தைகள் தங்களுக்கு ஆபத்து இருப்பதை உணரத் தொடங்கினர். இதனால் ஒரு சிறுமி பயத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து, மோட்டார் சைக்கிளில் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதேநேரம், இனி பள்ளியில் இருப்பதும், பேருந்து மூலம் தப்பிச் செல்லலாம் என நினைப்பதும் மிகவும் ஆபத்தானது என உணர்ந்து, உயரமான பகுதியை நோக்கி ஓடுமாறு மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் ஒரு போதி மரத்தின் அடியில் தஞ்சம் புகுந்த நேரத்தில் வெள்ளமானது அந்த பள்ளிக் கட்டிடங்களை முழுமையாக அடித்துச் சென்றுள்ளது.

எதிர்பாராத இரண்டு மரணங்கள்..!

தவாடியின் உடனடியான முடிவால் 1,643 குழந்தைகள் காப்பற்றப்பட்டாலும்,  ஆசிரியர்களில் ஒருவர் மட்டும் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். சமூக வரலாற்று ஆசிரியர் சந்தோஸ் பரியார் (32), காலை உணவு சமைப்பதற்காக ஆற்றங்கரையில் உள்ள தனது வாடகை அறைக்குத் திரும்பியபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பள்ளியின் துப்புரவுப் பணியாளரான சுல்தான் லாமாவும், கதவுகளை மூடுவதற்காகத் திரும்பியபோது உயிரிழந்தார்.

ஆசிரியருக்கு குவியும் வாழ்த்துகள்..!

குழந்தைகளைக் காப்பாற்றியதற்காக உள்ளூர் மக்கள் தவாடியை ஒரு கதாநாயகன் என்று கூறி வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர்.  அதேநேரம், ஒரு காலத்தில் பள்ளி இருந்த இடத்தில் தற்போதுள்ள சேறும் சகதியுமாகக் கிடந்த இடிபாடுகளைப் பார்த்தவாறே, "நான் வேறு என்ன செய்துவிட முடியும்?" என்று தவாடி வேதனை தெரிவித்துள்ளார். திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லெண்டே கோலா ஆற்றின் செங்குத்தான மேல் பள்ளத்தாக்கில், லாங்டாங் லிருங் சிகரத்திலிருந்து ஒரு பெரிய பனி மற்றும் பாறைத் துண்டு உடைந்து சுமார் 1,200 மீட்டர் ஆழத்திற்குச் சரிந்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்கரி பல்கலைக்கழகத்தின் நிலவடிவவியலாளரான டேனியல் ஷுகர், அந்தப் பாறைத்திரள் ஏறக்குறைய 50 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியிருந்ததாகவும், இது லண்டனில் உள்ள கிரீன் பார்க்கின் அளவிற்கு ஏறக்குறைய சமமானது என்றும் மதிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks