Nepal Flood: உருத்தெரியாமல் அழிந்த நேபாளம்.. இதுவரை 150 பேர் பலி.. வெள்ளத்துக்கு காரணம் இதுதானா?

Nepal Flood: உருத்தெரியாமல் அழிந்த நேபாளம்.. இதுவரை 150 பேர் பலி.. வெள்ளத்துக்கு காரணம் இதுதானா?
News Image

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன 700க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்

நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட ஒரு சக்திவாய்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து இந்தப் பேரழிவு நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலச்சரிவு, 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு இணையான நில அதிர்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோஷி ஆற்றின் துணை நதியான லெண்டே கோலாவிற்குள் பெருமளவு பனி, பாறை, மண் மற்றும் நீரைக் கொண்டு சென்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நேபாளத்தின் நிலையை தலைகீழாக மாற்றிய இந்த வெள்ளத்தின் வீடியோ பதிவுகள் அனைத்தும் பார்ப்பவர்களுக்கே உயிர் பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பேரழிவு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நேர்பாள நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டுவதாக
அறிவித்துள்ளது. இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி  130க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவைச்  சேர்ந்தவர்களை கண்டறியும் பணி தீவிரம்

பாதிக்கப்பட்டவர்களில் பலர் கைலாஷ் மானசரோவர் வழித்தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வெள்ளத்தால் நேபாளம் முழுவதும் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் காவல்துறையினரோடு பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். உயிருடன் புதைந்த, உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியும், அவை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.

வெள்ளத்துக்கு நடுவே சிக்கி தவிக்கும் மக்களை மீட்க ஹெலிகாப்டர் சேவையும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அதில் இருப்பதல் அவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்தனை மேலோங்கியுள்ளது.

19 பாலங்கள் அடித்து செல்லப்பட்டது

இந்த பெரு வெள்ளத்தில் நேபாளத்தின் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பாலங்கள் இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தரை மார்க்கமாக செல்வது சவாலான காரியமாக மாறியுள்ளது. இந்தப் பேரழிவு நேபாளத்துடன் மட்டுமில்லாமல் திபெத்தில் உள்ள ஜூரோங் எல்லைப் பகுதியையும் பாதித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகளில் 20 பேர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 37 பேரின் இருப்பிடத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks