தன்னையும், மறைந்த தாயையும் பற்றி தவறாக பேசியவர்களை மன்னித்து விடுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, “ஜந்தர் மந்தரில் நடந்ததை நாடும் உலகமும் பார்த்துள்ளன. வசைமொழிகள் ஒருபோதும் எதற்கும் தீர்வு காணாது. தவறான வழியில் சென்ற சில இளைஞர்கள்எந்தவொரு நாகரிக சமூகத்திலும் இடமில்லாத மொழியைப் பயன்படுத்தினர். நான் மட்டுமல்ல, எனது மறைந்த தாயாரும் வசைச் சொற்களால் அவமதிக்கப்பட்டோம். ஒரு விஷயத்தில் கோபத்திலோ அல்லது பதிலடியிலோ தீர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. போராட்டக்காரர்களைத் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட இளைஞர்களாக உள்ளனர். வழிதவறியவர்களுக்கு வழிகாட்டுவோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். பாரதத்திற்காக உழைப்போம் என தெரிவித்துள்ளார்.

Abuses never solve anything.

Let’s guide the misguided.

Let’s work together.

Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL

— Narendra Modi (@narendramodi) July 31, 2026

மேலும் அதில், “சிறு வயதில் தவறுகள் நடப்பது இயல்பு. மேலும் அந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் சிறு வயது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதுதான் இளமையின் சாராம்சம். சமூகத்தில் கோபம் நிலவுகிறது, அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இந்தக் குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டிய நேரம் இது. அவர்கள் வழிதவறிய குழந்தைகள். அவர்களுக்கு வழிகாட்டுவது நமது கடமை. அவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதோ, துன்புறுத்துவதோ சூழ்நிலைகளை மாற்றிவிடாது. இதில் சம்பந்தப்பட்டவர்களை நான் மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் அவ்வாறே செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நடந்தது என்ன?

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் ஒரு மாத காலம் நீடித்தத நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்கள் - காவல்துறையினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

Also Read: Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!

இந்த நிலையில் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதேசமயம் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது பிரதமர் மோடி பற்றி அவதூறு நிறைந்த வசைச்சொற்களை பேசியதாக 25 வயதுப் பெண் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது மீண்டும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ள நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Source: Read Full Article