Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!

Nainar Nagendran: வாண்டட் ஆக வந்து சிக்கிய நயினார்.. அரசியல் பழி தீர்க்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
News Image

முதலமைச்சர் விஜய் குடும்பம் பற்றி அநாகரீகமாக பேசிய நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் சொந்த கட்சியிலும் அவரது பேச்சை சிலர் கண்டித்துள்ளனர். அதேசமயன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு இந்த சம்பவம் நயினாருக்கு கொடுக்க வேண்டிய சரியான பதிலடியாக அமைந்துள்ளது.

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைப் பேச்சு

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஒரே நாடு இதழின் இரண்டாம் பதிப்பை சென்னை கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்வில் பேசிய நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் அவரது குடும்பத்தை இழுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். உடனடியாக இதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

எனினும் தன்னுடைய பேச்சில் எந்த தவறும் இல்லை என்பதைப் போல மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு  பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான் என விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். நயினார் நாகேந்திரன் பேச்சை அதே மேடையில் இருந்த பெண் பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் என யாரும் கண்டிக்கவில்லை. மாறாக பாஜக நிர்வாகியான குஷ்பு சரமாரியாக சாடினார். அவர் தரம் தாழ்ந்த கருத்துகளை பேசியதாக பதிவிட்டார்.

வெளுத்து வாங்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவரும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்தபோது அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்தார்.

அவர் தலைவரானதும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களை மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் அண்ணாமலையையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் அவரின் ஆதரவாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியபோது அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் இருந்து விலகி அதில் இணைந்தனர். அப்போது அண்ணாமலை விலகுவதால் பாஜகவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் சாடியிருந்தார்.

இப்போது விஜய் குடும்பம் பற்றி அவர் பேசியது சர்ச்சையான நிலையில் இதுதான் சரியான நேரம் என்பது போல அண்ணாமலை ஆதரவாளர்கள் நயினார் நாகேந்திரனை வெளுத்து வாங்கியுள்ளனர். இதன்மூலம் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம், அரசியல் பழி தீர்த்தல் என இரண்டையும் அண்ணாமலை ஆதரவாளர்கள் கையாண்டு சற்று நிம்மதியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks