Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
News Image

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த ஊகங்கள் தொடரும் நிலையில், ஈரானின் செய்தி நிறுவனமான மெஹர் நியூஸ், ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. தேதி குறிப்பிடப்படாத அந்தக் காணொளியில், கமெனி நல்ல உடல்நிலையில் இருப்பது தெரிகிறது. கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறியதைத் தொடர்ந்து, இந்த காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியை முதன் முறையாக வெளியிடுவதன் மூலம், கமெனியின் உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த அதிகரித்து வரும் ஊகங்களைத் தணிக்க மெஹர் நியூஸ் முயன்றுள்ளது. மெஹர் நியூஸ், ஈரானிய அரசாங்கத்தின் இஸ்லாமிய மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடையது.

https://t.co/j8OfnYg64P
— وكالة مهر للأنباء (@mehrnewsarabic) August 8, 2026

இஸ்ரேலிய ஊடகங்கள் மிகவும் மோசமான நிலை குறித்து வெளியிட்ட செய்தி

வெள்ளிக்கிழமை அன்று, மொஜ்தபா கமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சில இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. சேனல் 14, ஈரானுக்குள் இருக்கும் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இந்த கூற்றை வெளியிட்டது. முன்னதாக, ஈரான்வயர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனின் நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கமேனியின் உடல்நிலை குறித்து ஈரான் தலைமைக்கு கவலை இருப்பதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

கமேனியின் மரணம் குறித்த செய்தி விரைவில் வெளிவருவதற்கான சாத்தியக்கூற்றை நிராகரிக்க முடியாது என்று ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் ஓர் ஆதாரம் கூறியுள்ளது.

தந்தையின் மரணத்திற்குப் பிறகு உச்ச தலைவரானார்

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு ராணுவத் தாக்குதலில் தனது தந்தை அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மொஜ்தபா கமேனி உச்ச தலைவர் பதவியை ஏற்றார். மொஜ்தபா கமெனி பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படவில்லை. அவர் இதுவரை எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மூலம் மட்டுமே பேசியுள்ளார்.

ஆரம்பகட்டத் தாக்குதல்களில் மொஜ்தபா கமெனி காயமடைந்ததாகவும், அவரது முகத்திலோ அல்லது உடலிலோ கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து, அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருவதாகவும், தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காயங்கள் சிறியவை என கூறும் ஈரான் அதிகாரிகள்

ஈரானிய அரசாங்க அதிகாரிகள், மொஜ்தபா கமேனியின் ஆரம்பகட்ட காயங்கள் மேலோட்டமானவை என்று கூறி, அவற்றின் தீவிரத்தை முன்னதாக குறைத்து மதிப்பிட்டிருந்தனர். நாட்டின் மூலோபாய முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான அறிவுறுத்தல்களை மொஜ்தபா கமேனி தொடர்ந்து வழங்கி வருவதாக மூத்த ஈரானிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அவர் நேரலையில் தோன்றாததால் தொடரும் யூகங்கள்

ஈரானிய அரசாங்க அதிகாரிகளின் கூற்றுக்களுக்கு மாறாக, மொஜ்தபா கமெனி பொது வாழ்வில் இருந்து நீண்டகாலம் விலகியிருப்பது, அவரது உடல்நிலை மற்றும் தலைமைத்துவ நிலை குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த சூழலில் தான் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. எனினும், அவர் நல்ல உடல்நலத்துடனும், முகத்தில் எந்த காயத் தழும்புகளோ இல்லாமலும் இருப்பதால், இந்த வீடியோ பழையதா அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்டதாக என்ற சந்தேகமும் ஒரு புறம் உலவுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks