இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து பயப்படும் நிலைக்கு திமுக வந்து விட்டதாக அமைச்சர் ரமேஷ் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

கதறி அழும் திமுக

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்த நிலையில் அதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ஆளும் கட்சி பேசுறாங்க.. நாங்களும் பேசுகிறோம். நீங்க ரொம்ப நல்லவரு. எல்லாத்தையும் நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதாக சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே நேரலையில் சென்று விடுகிறது. உங்க ஆளுங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். நான் வீட்டுக்கு சென்று பார்த்தால் என்னைப் பற்றி மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். இப்படியா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அழுகிறார், புலம்புகிறார்.

இதைப் பார்க்கும்போது என்னடா இது, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி, 75 ஆண்டுகால வரலாறு கொண்ட கட்சி, கேள்விகள் எல்லாம் ஃபயரா வரும் என நினைத்தால் இவர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து பயப்படுகிறார்கள்.

சேகர்பாபுவுக்கு சரமாரி பதிலடி

அதேசமயம் என்னுடைய துறையின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வேறு உள்ளார். அவர் 106 அறிவிப்புகளை வெளியிடப் போகிறேன் எனக்கு தெரியும் என நான் சொல்லும் முன்னரே தெரிவித்தார். உடனே கூட இருந்த 5 பேர், பார்த்தீங்களா எங்க ஆளு எப்படி கண்டுபிடிச்சாருன்னு என்னை ஏளன சிரிப்போடு பார்த்தார்கள். பெரிய அரியவகை கண்டுபிடிப்பு, புலனாய்வு புலி அவரு.. ஆனால் கல்லூரி கட்டுவீங்களா மாட்டுவீங்களான்னு கேட்குறாரு.. 106 அறிவிப்புன்னு தெரிஞ்ச அவருக்கு கல்லூரி கட்டுவோமா, மாட்டோமான்னு அறிவிப்பு இருக்கிறது தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் நாங்க நேர்மையாக, தூய்மையாக இருக்கிறோம். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. இப்படியும் சொல்கிறார்கள். மறுபக்கம் நீங்கள் ஆய்வு எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் எங்களுக்கு தெரியும் என கூறுகிறார்கள். அவ்வளவு தைரியமான ஆளாக இருந்தால் எதற்காக வேவு பார்க்கிறீர்கள்? எனவும் அமைச்சர் ரமேஷ் கேள்வியெழுப்பினார்.

நாங்கள் ஜோக்கர் தான்

தவெகவில் எல்லாரும் ஜோக்கராக இருக்கிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கஷ்டத்தை மறைத்து எதிரில் இருப்பவர்களை சிரிக்க வைப்பவர் தான் ஜோக்கர். அப்படிப்பட்ட நபராக இருப்பது எங்களுக்கு பெருமை தான். ஒருகாலமும் மக்களை சுரண்டி பிழைக்கும் புரோக்கராக இருக்க மாட்டோம். யார் புரோக்கர்ன்னு விவாதம் செய்வார்கள். நடத்திட்டு பொறுமையாக வாருங்கள். அதேபோல் சட்டமன்றத்தில் பாட்டு பாடுவதை அவர் விமர்சித்தார். சரி இவர்கள் காலத்தில் என்ன செய்தார்கள் என பார்த்தால், நம்ம ஆட்கள் கூட பரவாயில்லை. இவர்கள் பாடுவதை எல்லாம் காது கொடுத்துக்கூட கேட்க முடியவில்லை. நாங்க சூப்பர் சிங்கர் என்றால்.. நீங்க சன் சிங்கரா? என அமைச்சர் ரமேஷ் விளாசியுள்ளார்.

Source: Read Full Article