தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான நிலையில் நிதியமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆர். கே. நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மரிய வில்சன். இவர் தற்போது தவெக அரசின் நிதி, ஓய்வூதியம், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை ஆகஸ்ட் 5ம் தேதி மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலும் பங்கேற்று பதிலளித்தார். இந்த நிலையில் மரிய வில்சன் வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்று வருகிறார். சுமார் 200 கிமீ தூரம் செல்லும் அவருக்கு வழியெங்கும் பொதுமக்களும், தவெகவினரும் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர்.

பொதுவாக அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இதுபோன்ற பல நிகழ்வுகளில் பலரும் ஈடுபடுவது வழக்கம். அதேசமயம் எம்.எல்.ஏ., அமைச்சரான பிறகு நேரடியாக ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபடும் அளவுக்கு பிஸியாக மாறிவிடுவார்கள். ஆனால் மரிய வில்சன் பாதயாத்திரை மேற்கொண்டு வருவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

<iframe title="Aadhav Assembly speech | "பினாமிகளை தூக்குங்க ஆதாரம் தானா வரும்" ஆதவ் அர்ஜுனா ஆவேசம் | DMK | TVK" src="https://www.youtube.com/embed/cSqL3bAy1tA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 27 ஆண்டுகளாக நான் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்துக்கு நான் பாதயாத்திரை சென்று வருகிறேன். இந்தாண்டு ஒரு சிறப்பான ஆண்டு. நிறைய நன்றி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் அன்னை வேளாங்கண்ணி நிறைய பண்ணிருக்கிறார்கள். தொடர்ச்சியாக 28ம் ஆண்டு மாதா கோவிலில் கொடியேற்றும் நாளில் நன்றி சொல்லி விட்டு வர வேண்டும் என இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளேன்.

இதற்கான முறைப்படியான அனுமதி வாங்கியிருக்கிறேன். முதலமைச்சர், சபாநாயகரிடமும் அனுமதி வாங்கியிருக்கிறேன். எப்போதும் சென்னையில் இருந்து நான் பாதயாத்திரை செல்வது வழக்கம். ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடர் செல்வதால் இம்முறை நாம் புதுச்சேரியில் இருந்து பாதயாத்திரை செல்கிறேன். அப்படியாக கடலூர் வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன். ஆகஸ்ட் 28 அல்லது 29ம் தேதி நான் வேளாங்கண்ணி ஆலயம் சென்று விடுவேன். அங்கு கொடியேற்றம் முடிந்ததும் சென்னை திரும்புவேன்” என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அமைச்சரான பிறகு நடந்து செல்வது என்பது எனக்கு வழக்கம்போல நிகழ்வாக உள்ளது. ஆனால் மக்கள் வரவேற்பது தான் புதிதாக உள்ளது. மக்கள் அடையாளம் கண்டு நிறைய விஷயங்களை என்னிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் பல பிரச்னைகளும் முன்வைக்கிறார்கள். எனக்கு அதைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. நான் பாதயாத்திரை செல்லும்போது பார்க்கும் விஷயங்களை எல்லாம் கவனிக்கிறேன். துறை சார்ந்த அமைச்சர்களிடம் அவற்றை எல்லாம் கொண்டு சேர்ப்பேன். மற்ற பக்தர்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ உதவி, கழிவறை உதவி போன்ற பிரச்னைகளை அடையாளம் கண்டுள்ளேன். அடுத்த ஆண்டு அனைத்தும் சரி செய்யப்படும் எனவும் அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

Source: Read Full Article