FM Marie Wilson: தமிழை உச்சரிக்க பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள் என திமுக உறுப்பினரின் கருத்துக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாக பதிலளித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

ஆவேசமாகிவிட்டேன்.. - மரிய வில்சன் விளக்கம்

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து, நிதியமைச்சர் மரிய வில்சன் உரையாற்றினார். அப்போது, ”திமுகவின் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாரயும், என்னையும் ஒப்பிட்டு இங்கு சில கருத்துகள் விவாதிக்கப்பட்டன. ஆம், மொழி எனக்கு ஒரு தடையாக உள்ளது. நான் அதை மறுக்கவில்லை. அன்றைக்கு நான் கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மை தான். எனக்கும் தாய்மொழி தமிழ் தான். நான் பிறந்தது பாண்டிச்சேரி, வளர்ந்தது திருவாரூர், படித்தது சென்னை, இப்போது என்னை தத்தெடுத்து இருப்பது ஆர்.கே. நகர். ஒரு இடத்தில் இல்லாமல் எல்லா இடத்திலும் சுற்றி சுற்றி வந்துள்ளேன். இங்கு நிறைய அறிஞர்கள் இருக்கின்றனர். 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக எனக்கு இங்கு கிடைத்த அனுபவம் என்பது மிகப்பெரிய கவுரம்.

திருத்திக் கொள்கிறேன் - மரிய வில்சன்

இந்த வாய்ப்பை கொடுத்த எங்களது தலைவருக்கு மிகப்பெரிய நன்றி. காரணம் ஒரே இடத்தில் இத்தனை பேர், இவ்வளவு தீவிரமான விவாதம், சௌமியா அன்புமணி சொன்னதை குறிப்பு எடுத்துக்கொண்டேன், தோழர்கள் சொன்னார்கள், எனது நல்ல நண்பர் வன்னியரசு சார் சொன்னது, காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பேசினார்கள். எல்லாமே எங்களுக்கு தகவல் தான், அறிவு தான் மறுக்கவில்லை. எங்களுக்கு இதுதான் முதல்முறை. முதல்முறையில் நாங்கள் திருத்திக் கொள்வோம், சில விஷயங்களை உங்களிடமிருந்து கற்றுக்கொள்வோம். அடுத்து வரும் நாட்களில் வலுவாக மீண்டு வருவோம். அதில் மாற்று கருத்து இல்லை” என அமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்தார்.

Source: Read Full Article