Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
News Image

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர் குஷ்புவே தற்போது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவு குறித்து இப்போது பார்க்கலாம்

“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட குஷ்பு, தமிழக முதல்வரின் தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது என்றும், இதுபோன்ற கருத்துக்கள் எந்தவொரு தளத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறியுள்ளார்.

மேலும், “எனது தலைவர் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்கள் எப்போதும் நாரி சக்தி பற்றிப் பேசி, பெண்களை மிகவும் உயர்வாக மதித்து வந்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் தரம் தாழ்ந்தவை. எப்போதும் என் கருத்தை வெளிப்படையாகக் கூறி, ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குவதையோ அல்லது அவமதிப்பதையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டிராத நான், இன்று இதை கேட்ட பிறகு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறேன்.“ என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, “கட்சியை கேள்வி கேளுங்கள், மக்களுக்காக உங்கள் குரலை எழுப்புங்கள், அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் அதைத் தாக்குங்கள், ஆனால் உங்கள் கருத்தை நிலைநாட்ட ஒருபோதும் ஒரு பெண்ணை பயன்படுத்தாதீர்கள். பெண்கள் அரசியல் விளையாட்டில் காய்கள் அல்ல. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இந்த உலகில் இருப்பதற்கு ஒரு பெண்ணும் ஒரு தாயுமே காரணம். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்பு வேதனையானது மற்றும் காயப்படுத்துவது.“ என்று தனது கண்டனத்தை குஷ்பு பதிவு செய்துள்ளார்.

The crude remark made by BJP State President Thiru #NainarNagendran avl about CM of Tamilnadu's mother is disgusting. Such comments are unacceptable on any platform.

My leader Honorable PM Shri @narendramodi ji has always spoken about Nari Shakti and held women in high esteem.…
— KhushbuSundar (@khushsundar) August 15, 2026

நயினார் நாகேந்திரன் என்ன பேசினார்.?

சென்னையில் இன்று நடந்த தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ இதழான ஒரே நாடு இதழின் இரண்டாம் பதிப்பு அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்தில் சென்று அப்பா எங்கே என கேட்கிறார்கள், வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டசபையில் சென்று அப்பாவை கேட்டால் யாருக்கு தெரியும். இப்படிப்பட்ட ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது“ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இப்படி, முதலமைச்சர் விஜய் குடும்பத்தைப் பற்றி நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks