காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளாக்குளம் 33/11 கே.வி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு.

காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளாக்குளம் 33/11 கே.வி துணை மின் நிலையத்தில் 05.08.2026 புதன்கிழமை காலை 11:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மின்மாற்றியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் ஐயம்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளான செல்லியம்மன் நகர், கோயம்பக்கம், படப்பம், வள்ளுவபாக்கம் மற்றும் களக்காட்டூர் அதை சுற்றியுள்ள சில பகுதிகளான குருவி மலை, வேடல், மேல் பெரமணல்லூர், வளத்தோட்டம் வசந்தம் நகர், மேலும் சின்ன காஞ்சிபுரம் அதை சுற்றியுள்ள சில பகுதிகளான ஸ்ரீ ரங்கராஜ வீதி, ஆணைக்கட்டி தெரு, மலையாள தெரு, யாகசாலை மண்டப தெரு, சேஷாத்ரி பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்:

05.08.2026 அன்று புதன்கிழமை காலை 11:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article