"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
News Image

" மாற்று திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் "

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஜே.சி.டி பிரபாகர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சேவை மையத்தை திறந்து வைத்த பின் உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் ;

மிகக் குறுகிய காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவாக மக்களை சந்திக்க வேண்டும் என்பதிலும் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதையும் நம்முடைய முதலமைச்சர் விரும்புகிறார். அவர் எதை செய்தாலும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என நினைப்பார். எதில் ஈடுபட்டாலும் அந்த ஈடுபாடு அவரது கண்களில் தெரியும்.

" மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து சேவை செய்யனும் "

மனித நேயம் என்பது ஒரு முதலமைச்சருக்கு அடிப்படை அதன் அடிப்படையில் தமிழ்நாடு மனித நேயமிக்க அவரைப் பெற்றிருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது அதனால் பல சவால்களை சந்தித்து வருகிறோம். மக்கள் அனுதினமும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சர் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறார். அவருக்கு அனைத்து துறைகளிலும் என்னென்ன நடந்திருக்கிறது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நன்றாக தெரிந்திருக்கிறது.

தற்பொழுது மாற்றுத் திறனாளிகள் துறை தமிழ்நாட்டில் வேகம் எடுத்து இருக்கிறது. அதனுடைய ஒரு அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களை தேடி செல்ல வேண்டும். மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து சேவை செய்ய வேண்டும்.

காலதாமதம் செய்வதும் கிடப்பில் போடுவதும் என்கிற நிலைமை மாற வேண்டும். அதனால் தான் முதலமைச்சர் சவுக்கில் அடிப்பது போல சொல்லிவிட்டார். வெளிப்படைத்தன்மையான லஞ்சமற்ற அரசு நம் அரசாக இருக்கும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks