இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் படிக்கல், துருவ் ஜுரல் ஆகியோரின் அபார சதத்தால் இந்தியா 503 ரன்களை குவித்தது.

சூர்யபண்டாரா அபாரம்:

இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு உதாரா, கமீல் மிஷாரா, பிரபாத் ஜெயசூர்யா அடுத்தடுத்து அவுட்டாக சூர்யபண்டாரா - மென்டிஸ் ஜோடி நிதானம் காட்டியது. நிதானம் காட்டிய மென்டிஸ் 32 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் டி சில்வா 8 ரன்களில் அவுட்டானார்.

முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடி சதம் விளாசிய சோனல் தினுஷா இந்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடினார். அவர் அளித்த ஒத்துழைப்பால் சூர்யபண்டாரா அரைசதம் விளாசினார். அபாரமாக ஆடிய இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அபாரமாக ஆடி இலங்கையை சரிவில் இருந்து மீட்ட சூர்யபண்டாராவை 133 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஃபாலோ- ஆனைத் தவிர்க்குமா இலங்கை?

அடுத்து வந்த டிக்வெல்லா டக் அவுட்டானார். சோனல் தினுஷாவிற்கு கேசரா நுவந்தா நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சிறந்த ஒத்துழைப்பு அளித்த கேஷரா நுவந்தா 74 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். 3வது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை 83.4 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது.

8 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், இலங்கை அணி இந்தியாவைக் காட்டிலும் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இலங்கை அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் 304 ரன்களை எடுக்க வேண்டும். கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ள நிலையில், 39 ரன்களை இலங்கை அணி கடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி பெறுமா இந்தியா?

இலங்கை அணி ஃபாலோ ஆன் ஆனால் இந்திய அணி இலங்கையை மீண்டும் பேட் செய்ய அழைக்கும். அப்போது அவர்கள் இன்னிங்ஸ் தோல்வியையே தவிர்க்க போராடும் சூழல் உண்டாகும். ஃபாலோ ஆனைத் தவிர்த்தாலும் இந்திய அணியைக் காட்டிலும் இலங்கை அதிக ரன்கள் எடுப்பது என்பது சாத்தியமற்றது ஆகும்.

இதனால், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். முகமது சிராஜ் - ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் உயரும். இது இந்திய அணிக்கு பலன் அளிக்கும்.

Source: Read Full Article