Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
News Image

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலே அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளாக ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் உள்ளனர். நட்சத்திர வீரர்கள் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

சென்னைக்கு வருகிறாரா ஹர்திக்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமானவர் ஹர்திக் பாண்ட்யா. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் அணிக்கு சென்றவர் கேப்டனாக களமிறங்கிய முதல் தொடரிலே கோப்பையை வென்றார். இதையடுத்து, மீண்டும் மும்பைக்கு கேப்டனாக வந்தவரால் தனது அணியை திறம்பட வழிநடத்த இயலவில்லை.

அவரது தலைமையில் மும்பை ஆடிய 3 சீசன்களிலும் படுதோல்வி அடைந்த நிலையில், நடப்பாண்டில் அவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரேடிங் முறையில் அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை செல்லப்போவது யார்?

மும்பை அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் மாற்றிக்கொள்ளப்பட உள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அல்லது ப்ரெவிஸ் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும் விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

கடந்த சீசனில் சென்னை அணியில் ஜடேஜா, சாம் கரண் ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்பட்டு சென்னைக்கு சாம்சன் வந்தார். சாம்சன் கடந்த தொடரில் சிறப்பாக ஆடினாலும் அணி தொடரை விட்டு வெளியேறியது. ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் சூழலில், அவர் சிஎஸ்கே அணிக்கு வந்தால் கேப்டனாக வருவாரா? அல்லது வீரராக வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பையின் புது கேப்டன் யார்?

ஹர்திக் பாண்ட்யா சென்னைக்கு வந்தால் மும்பை அணியை கேப்டனாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவாரா? அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா இதுவரை 162 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 955 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 91 ரன்களை எடுத்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 82 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கருத்து வேறுபாடு:

ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்து ட்ரேடிங் முறையில் மாற்றப்படுகிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் மும்பை அணி நிர்வாகம் அதை மறுத்துள்ளது. ஆனாலும், கடந்த சீசனில் மும்பை அணியின் உரிமையாளர்கள் நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி மும்பை வீரர்கள் விளையாட்டால் அதிருப்தி அடைந்து பாதியிலே மைதானத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks