Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
News Image

Gummidipundi Gudur New Train Track: கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே மேலும் இரண்டு ரயில் வழித்தடங்களை அமைக்க, 2 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி - கூடூர்: புது ரயில் வழித்தடங்கள்

கும்ம்பிடிப்பூண்டி மற்றும் கூடூர் இடையே மூன்றவாது மற்றும் நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான 90 கிலோ மீட்டர் நீளத்திற்கான வழித்தட பணிகளானது, 2 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவில் 2030-31ம் ஆண்டிற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்க்ரேடாகும் சென்னைக்கான இணைப்பு..!

சென்னை, விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா பகுதிகளுக்கு இடையே மிகவும் முக்கியமான இணைப்பு பகுதியாக, ஆந்திர மாநிலத்தின் கூடூர் பகுதி உள்ளது. கும்மிடிப்பூண்டியானது, சென்னையிலிருந்து வருபவர்கள் மற்றும் செலபவர்கள் என அனைத்து தரப்பினரையும் மிகவும் முக்கியமான நகர்பகுதிகளுடன் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்குகிறது. இந்த வழித்தட பணிகள் நிறைவுற்றால் சென்னை, எண்ணூர் துறைமுகம் மற்றும் கிருஷ்ணபட்டினம் துறைமுகங்களுக்கான பயணம் மிகவும் தங்கு தடையற்றதாக மாறும். இதுபோக புலிகாட் ஏரி, நேலபட் பறவைகள் சரணாலயம் மற்றும் வீரராகவர் கோயில் போன்ற சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான இணைப்பும் மேம்படும் என கூறப்படுகிறது.

90KM - முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடம்

டெல்லி-சென்னை மற்றும் ஹவுரா-சென்னை ஆகிய முக்கிய வழித்தடங்களில் அமைந்துள்ள 90 கிலோ மிட்டர் நீளமுள்ள கும்மிடிப்பூண்டி-கூடூர் பிரிவு ஒரு முக்கியமான இரட்டைப் பாதை வழித்தடமாகும். விசாகப்பட்டினம்-சென்னை தொழில் வழித்தடம் மற்றும் கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடம்  ஆகியவற்றின் கீழ் இடம்பெற்றுள்ள இப்பகுதியில், கூடூர் நிலையமானது சென்னை, விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய சந்திப்பு மையமாகவும், கும்மிடிப்பூண்டி நிலையமானது சென்னைக்கு வந்து செல்லும் பயணிகளுக்கான ஒரு முக்கிய புறநகர் மையமாகவும் அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையிலான இந்தப் புதிய ரயில் பாதை இணைப்பு மட்டுமே 61 லட்சம் மனித நாட்கள் அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். அதோடு ஆண்டுதோறும் சரக்கு மற்றும் போக்குவரத்துச் செலவில் ரூ. 382.15 கோடியை மிச்சப்படுத்தும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி

பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதன் மூலம், கூடுதல் ரயில் நிறுத்தங்களும் சேவைகளும் கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்குச் செல்லும் தினசரி பயண நேரத்தைக் குறைக்கும். சென்னை சென்ட்ரலில் இருந்து விரைவு ரயில் வரும்போது, ​​EMU ரயில்கள் மாற்றுப் பாதையில்  நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த வழித்தடத்தின் பயன்பாடு என்பது 131 சதவிகிதத்தை கடந்துள்ளது. இந்நிலையில் அமைக்கப்படும் புதிய வழித்தடங்களானது, புறநகர், விரைவு மற்றும் சரக்கு ரயில்களை தனித்தனி இருப்பு பாதைகளில் ஒரே நேரத்தில் பயணிக்க வழிவகை செய்யும்.

திட்ட விரிவாக்கத்தின் மற்ற பலன்கள் என்ன?

புதிய வழித்தடங்களானது முக்கிய துறைமுகங்களை ஸ்ரீ சிட்டி போன்ற தொழில் மையங்களுடன் இணைத்து, தேசிய சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கிறது

இத்திட்டம் விசாகப்பட்டினம்-சென்னை தொழில் வழித்தடத்திற்கு ஆதரவளித்து, பெருமளவிலான கட்டுமான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது

கனரகப் போக்குவரத்தை விரிவாக்கப்பட்ட ரயில் பாதைகளுக்கு மாற்றுவது, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, மில்லியன் கணக்கான லிட்டர் எரிபொருளையும் சேமிக்கிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks