Farmers Subsidy : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.15,000.! அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி .? என்னென்ன ஆவணங்கள் தேவை.?

Farmers Subsidy : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.15,000.! அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி .? என்னென்ன ஆவணங்கள் தேவை.?
News Image

விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாகும். அந்த வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு கடன் உதவி திட்டம், மானிய உதவி திட்டங்களின் மூலமாகவும் விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் விவசாயிகள் பம்புசெட் வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பம்புசெட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 இவற்றில் எது குறைவான தொகையோ அந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பம்புசெட் வாங்க விவசாயிகளுக்கு மானியம்

இந்த திட்டமானது விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மின் மோட்டார் பம்புசெட் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.  நிலத்தடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். புதிதாக கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றவும் இந்த உதவியைப் பெற முடியும். குறிப்பாக, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

திட்டத்தின் பயன்கள்

புதிய திறன்மிகு பம்புசெட் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து, குறைந்த செலவில் அதிக அளவு பாசன நீரை இறைக்க முடியும். இதனால் பாசன வசதி மேம்பட்டு, பயிர் சாகுபடி பரப்பையும் உற்பத்தியையும் அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

யாருக்கெல்லாம் மானியம் கிடைக்கும்?

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்கள்.

திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்புசெட்டை மாற்றுபவர்களும் பயன்பெறலாம்.

புதிதாக ஆழ்துளைக் கிணறு,குழாய் கிணறு,திறந்தவெளிக் கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீர் பாசனத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், திட்டத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறை

தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டாரத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் அணுக வேண்டும்.

தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தை உழவன் செயலி அல்லது அரசின் ஆன்லைன் வேளாண் சேவை தளத்தின் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி உள்ளது.

அதிகாரிகள் தகுதியை சரிபார்த்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட பம்புசெட் வாங்கி நிறுவிய பின்னர் விதிமுறைகளின்படி மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் அட்டை நகல்

வங்கி பாஸ்புக் முதல் பக்க நகல்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

சிறு,குறு விவசாயி சான்றிதழ்

5 ஏக்கர் வரை நிலம் இருப்பதற்கான தாசில்தார் சான்று

சிட்டா மற்றும் அடங்கல் – கிணறு விவரங்களுடன்

மின் இணைப்பு சான்றிதழ்

பம்புசெட்டுக்கான விலைப்பட்டியல்

SC/ST விவசாயிகளுக்கு சமூகச் சான்றிதழ்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks