ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?

ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
News Image

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர். முகமது அபாஸின் அபாரமான பந்துவீச்சில் தடுமாறிய இங்கிலாந்து ஜோர்டன் காக்ஸ், ஜேமி ஸ்மித்தின் அபாரமான பேட்டிங்கிலால் 290 ரன்களை எடுத்தது.

389 ரன்கள் டார்கெட்:

இதையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம், ஷான் மசூத், ஷஃபிக், ரிஸ்வான் என முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு டாவ்ன் லாரன்ஸின் அபாரமான அரைசதத்தால் இங்கிலாந்து 208 ரன்கள் எடுத்தது.  பாகிஸ்தான் அணியின் அனுபவ பந்துவீச்சாளர் முகமது பர்வேஸ் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு 389 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தடுமாறும் பாகிஸ்தான்:

பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அசான் அவாய்ஸ் 6 ரன்களுக்கு அவுட்டாக, அப்துல்லா ஷஃபிக் டக் அவுட்டானார். முதல் இன்னிங்சில் சொதப்பிய கேப்டன் பாபர் அசாம் 2வது இன்னிங்சிலும் 6 ரன்களுக்கு அவுட்டானார். தற்போது வரை பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

சமாளிக்குமா பாகிஸ்தான்?

இன்று 4வது நாள் ஆட்டமே நடந்து வரும் நிலையில், இன்னும் ஒரு நாள் இருப்பதால் இந்த போட்டிக்கு முடிவு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது. ராபின்சன், ஆர்ச்சர், ஜோஷ் டங், அட்கின்சன் என இங்கிலாந்து பந்துவீச்சு வலுவாக உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி எஞ்சிய 7 விக்கெட்டுகளை இழக்காமல் சமாளித்து ஆடுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவே வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு பின்வரிசையில் இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், உஸ்மான் மட்டுமே பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். எஞ்சியவர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் பாகிஸ்தானுக்கு அதிகளவு நெருக்கடி உள்ளது.

மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சல்மான் அகா கேப்டனாக பொறுப்பு வகித்த நிலையில், கடந்த டெஸ்ட் போட்டியில் ஆடாத பாபர் அசாம் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks