DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு

DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
News Image

DMK TVK: விவாத நிகழ்ச்சிகளில் தவெகவினருக்கு எதிராக திமுகவினர் மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபடுவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

களேபரமான விவாத நிகழ்ச்சி

சென்னையில் தனியார் யூட்யூப் சேனல் சார்பில் நேற்று விவாத நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை காரசாரமாக பகிர்ந்தனர். அந்த வகையில் தவெகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதனை ஏற்க முடியாது என கூறி பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து இருந்த திமுகவினர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். நாஞ்சில் சம்பத் இதற்கு மேல் பேசக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை சமாளிக்க எவ்வளவோ முயன்றுள்ளனர். ஆனால் கீழே இருந்தவவர்கள் அநாகரீகமான சொற்களை பயன்படுத்தி வசைபாட தொடங்கினர்.

நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல்:

காவல்துறையினரும் அரங்கிற்குள் வந்து திமுகவினரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் சிலர் திடீரென விவாத மேடையின் மீது ஏற, பவுன்சர்கள் நாஞ்சில் சம்பத்தை சூழ்ந்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கீழே இருந்த சிலர் நாற்காலியை தூக்கி வீச, அது பவுன்சர்கள் மற்று நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்பு நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரண்டு தரப்புகளும் சமாதானம் செய்யப்பட்டு அங்கு இயல்பு நிலை மீட்கப்பட்டது.

தொடரும் தவெக - திமுக மோதல்:

விவாத நிகழ்ச்சிகளில் தவெக மற்றும் திமுக இடையே கைகலப்புகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் தி டிபேட் எனும் தனியார் யூட்யூப் சேனல் நடத்திய விவாதத்தின் போதும் தவெக செய்தி தொடர்பாளர் ராவுத்தருக்கு எதிராக, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அநாகரீகமாகவும் பேசி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனால் அங்கு ஒரு மோசமான சூழல் நிலவியது.

விவாத மேடையில் நாஞ்சில் சம்பத் அவர்களின் கருத்துக்கு, கருத்தால் எதிர் வாதம் வைக்க திராணியற்ற திருட்டு திமுக கும்பல் அவரை நாற்காலியால் தாக்கியுள்ளனர்.

இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் pic.twitter.com/Qw3HhsLgvZ
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) August 20, 2026

தவெகவினர் கடும் கண்டனம்:

நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு தவெகவினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்களை கடந்த பிறகும் கூட, தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமின்றி இத்தகைய அராஜக போக்கில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக சாடுகின்றனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அதை வன்முறையாக்க கூடாது. ஒவ்வொரு மேடையிலும் திமுகவினர் முதலமைச்சரையும், தவெக அரசையும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதை தங்கள் தரப்பு கருத்துகளால் மட்டுமே எதிர்க்கிறது. ஆனால், ஆட்சியை இழந்த பிறகும் கூட தங்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என திமுகவினர் இறுமாப்புடன் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தங்களுக்கு எதிராக பேசியவர்களை ஒடுக்கும் எதேச்சதிகார போக்குடன் இருந்ததால் தான், தொடங்கி இரண்டே ஆண்டுகளான கட்சியிடம் திமுக தோல்வி கண்டது. அதை இன்றும் உணராமல் அராஜகத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல எனவும், நாஞ்சில் சம்பத்தை தாக்கியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks