தெலங்கானா மாநிலத்தில் வளர்ப்பு நாய் ஆட்டோ ஒன்றில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாய் செய்த சம்பவம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கநாயக்குல குட்டாவை அடுத்துள்ள கம்மம் நகரில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தண்டேட்டி ஸ்ரீநாத் என்ற இளைஞர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வழங்கும் தொழில் செய்து வருகிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில் ஸ்ரீநாத் தனது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.

அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வேமுலா மது என்பவர் தனது வளர்ப்பு நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்துள்ளார். அந்த நாய் வரும் வழியில் ஸ்ரீநாத் அமர்ந்திருந்த ஆட்டோவின் சக்கரத்தில் மலம் கழித்தது. இதனால் கோபமடைந்த ஸ்ரீநாத் மதுவிடம் நாயின் செயல் பற்றி கேள்வியெழுப்பினார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இது மிகப்பெரிய சண்டைக்கு வழி வகுத்தது.

அக்கம் பக்கத்தின் கூடியதால் தான் அவமானப்பட்டதாக ஆத்திரமடைந்த மது தனது வீட்டிற்குச் சென்று ஒரு கத்தியை எடுத்து வந்தார். பின்னர் சற்றும் எதிர்பாராதவிதமாக கண்மூடித்தனமாக கத்தியால் ஸ்ரீநாத்தை ஐந்து முறை தாக்கினார். இதனால் நிலைகுலைந்து போன ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக கம்மம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

நண்பனின் பகையால் நடந்த கொலை

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கம்மம் மூன்று நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீநாத் உடலைக் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கொலை செய்யப்பட்டவருக்கும், குற்றவாளியான மதுவுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் ஆட்டோவில் ஸ்ரீநாத்துடன் அவரது நண்பர் வீரேஷ் இருந்துள்லார். அவருக்கும் மதுவுக்கும் இடையே பகை இருந்துள்ளது. இதனால் வேண்டுமென்றே நாயைக் கொண்டு பிரச்னை செய்தததாக இந்த சண்டை வெடித்து கடைசியில் கொலையில் முடிந்துள்ளது தெரிய வந்தது. தற்போது தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்ட மதுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் உள்ளிட்ட விலங்குகள் இதுபோன்ற விஷயங்களை செய்வது இயல்பு தான் என்றாலும் இது கொலை வரை சென்றிருக்க தேவையில்லை என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article