வேளாண் பட்ஜெட்- புதிதாக எதுவும் இல்லை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தவெக அரசு இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இன்றைய பட்ஜெட் என்பதை சொலுவதை விட முதல்வருக்கு ஜால்ரா அடித்துள்ளனர். மரபுக்கு மீறி செயல்களை செய்துள்ளார்கள். இன்றைய பட்ஜெட்டில், புதிதாக எதுவும் இல்லை. புது திட்டமும் இல்லை, மேகமாது அணை பிரச்சனை, விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி என ஏமாற்றியுள்ளனர்.

திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவிப்பு

குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த தவெக ஆட்சியில் கடந்த 3 மாத காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது விவசாயிகள். எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய கூட்டத்தில் திமுக கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியில் என்னென்ன திட்டம் கொண்டுவந்தமோ அந்த திட்டத்தில் பெயர்களை மாற்றி முன்பாக ஒரு வார்த்தையை சேர்த்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி என வாக்குறுதி கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததும் எதுவும் செய்யவில்லை. பயிர் கடன் தள்ளுபடி 50 ஆயிரம் ரூபாய் என அறிவித்தார்கள். இதனையடுத்து 75 ஆயிரமாக உயர்த்தினார்கள். விவசாயிகள் முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேடகிறார்கள். ஆனால் எந்தவித பதிலும் இல்லை.

தைரியம் இருந்தால் பதில் சொல்லட்டும்

மேகதாது அணை விவகாரம் தற்போது சீரியஸாக உள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை கொடுக்க முடியாது என சொல்லிவிட்டார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை. வாய் திறக்கவும் இல்லை.

இந்த நிலையில் நாளைக்கு விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். வாய்ப்பு கொடுக்கப்படும் என நம்புகிறோம். நிறைய கேள்வி எழுப்பவுள்ளோம். முதலமைச்சர் வாயை திறப்பார் என மக்களை போல நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம். மேலும் நாளைக்கு சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் விவசாய திட்டம் தொடர்பாக பேச இருக்கிறோம். தைரியம் இருந்தால் முதலமைச்சர் பதில் சொல்லட்டும் என உதயநிதி தெரிவித்தார்.

Source: Read Full Article