CM Vijay: அதிமுகவை அபரிக்க முயன்றால் உண்மை தொண்டன் உயிரோடு இருக்கமாட்டான் என, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

அதிமுகவை அபகரிக்கும் முயற்சி - ஆர்.பி. உதயகுமார்

ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், “சட்டசபையில் உங்களை பாராட்டி பேசும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா போன்றோர், அடுத்து விஜய் இந்தியாவிற்கே பிரதமராக வரவேண்டும் என்ற தங்களது ஆசையை இல்லை பேராசையை பதிவு செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமராக மட்டுமல்ல, அமெரிக்காவிற்கே ஜனாதிபதியாக கூட வருவார். ஐக்கிய நாட்டிற்கே கூட தலைவராக வருவார், சீன அதிபராக வருவார், இங்கிலாந்தின் இளவரசராக வருவார், தென்கொரியாவின் அதிபராக வருவார் என்று கூட பாராட்டி பேச விஜயின் அமைச்சர்களுக்கு எந்த வாய்பூட்டு சட்டமும் கிடையாது. ஆனால், அதிமுகவில் பிள்ளை பிடிக்கின்ற வேலையை தொடர்கின்ற நீங்கள், நான் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., நான் தான் புரட்சி தலைவி அம்மா, தவெக ஆட்சி தான் அதிமுக ஆட்சி என்று அதிமுகவின் அப்பாவி தொண்டர்களை, அதிமுகவின் உண்மை விசுவாசிகளை ஏமாற்றி அதிமுகவை அபகரிக்கவோ, அழிக்கவோ நீங்கள் முயற்சி எடுப்பது எங்களது கடைசி விசுவாசி தொண்டன் இருக்கும் வரை நடக்கவே நடக்காது.

”முதலமைச்சர் விஜய் உயிரோடு இருக்கமாட்டார்”

அப்படியே நீங்கள் மோசடி செய்து சமூக வலைதளங்கள் மூலமான ஒரு அபாயகரமான கட்டமைப்பை உருவாக்கி அதிமுகவை அழிக்கும் நிலை ஏற்பட்டால் முதலமைச்சரே, அதிமுகவின் விசுவாச தொண்டர்கள் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம். இல்லையென்றால் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? என்பது எங்களுக்கு தெரியாது. அந்நியர் படையெடுத்து அபகரிக்க முயன்றால் தாய்நாட்டை காப்பதற்காக தாய் தந்த உயிரை விலையாகவும், வீரமாகவும், விசுவாசமாகவும் கொடுத்தது தான் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் உரிமை முழக்கம். இது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும். அப்படிபட்ட அந்நியர் படையெடுப்பு அதிமுகவில் நுழையுமானால், அபகரிக்க முற்படுவார்கள் ஆனால் குடும்பத்திற்கு ஒருவர் வெற்றி திலகமிட்டு, வீர திலகமிட்டு தற்கொலைப்படையாக புறப்பட்டு புரட்சியை நிகழ்த்தி காட்டுவதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசி எங்களுக்கு கிடைக்கும்” என ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

கண்டனங்களும்..எதிர்ப்புகளும்..!

முதலமைச்சர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடும் வகையிலான ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு, நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேநேரம், சொந்த தோல்வியை தொடர்ந்து அரசியல் வாழ்க்கையை தொலைத்து வரும் உதயகுமார், தனக்கான வெளிச்சத்திற்காக முதலமைச்சர் விஜய் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார். தற்போது கொலை மிரட்டல் விடுக்கவும் தொடங்கியுள்ளார். சுயலாபத்திற்காக உள்நோக்கத்துடன் பேசி வரும் இத்தகைய நபர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article