முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் விதிகளின்படி திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தார். சென்னை பெரம்பூர் தொகுதியில் கடந்த ஜூலை 13ம் தேதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் பங்கேற்று திறந்து வைத்த நிலையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனியாக இணையதளமும் தொடங்கப்பட்டது.

அதில் தொகுதி சார்ந்த குறைகளை பெ தெரிவிக்கலாம் எனவும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்கள் பற்றாக்குறை பிரச்னையா?

இப்படியான நிலையில் பெரம்பூர் தொகுதியில் உள்ள விஜயின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் குறைதீர் இணையதளத்தை பராமரிக்க ஊழியர்க பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த தகவலை எம்.எல்.ஏ. அலுவலகம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், விஜய் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இணையதளத்தைப் பராமரிக்க ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், பொதுமக்களின் புகார்கள் முறையாக கையாளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்களின் குறைகளை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் தவெக மக்கள் சேவை இணையதளம் முறையாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய Dashboard-ல்: மொத்த புகார்கள் – 1,146, தீர்வு காணப்பட்டவை – 532, நிலுவையில் உள்ளவை – 614 ஆக உள்ளது.

மேலும், வார்டு வாரியாகவும், துறை வாரியாகவும் புகார்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் நடவடிக்கைகளும் தினசரி கண்காணிப்பில் உள்ளன. முக்கியமாக ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறோம். இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த தொலைபேசி எண் புகார் பதிவு செய்வதற்கான எண் மட்டுமே; அதற்கு நேரடியாக தொலைபேசி அழைப்பு செய்யும் வசதி இல்லை. இது தொடர்பாகவும் தவறான தகவல்கள் பகிரப்பட வேண்டாம்.

யாரோ ஒருவர் கூறிய தகவலை மட்டும் அடிப்படையாக வைத்து, உண்மை நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். செய்தியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நேரடியாக எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்து, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் உண்மை நிலவரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் புகார்கள் தினசரி கண்காணிக்கப்பட்டு, அவற்றை உரிய முறையில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. யாரோ ஒருவர் கூறிய தகவலை மட்டும் வைத்து தவறான தகவல்களை பகிர வேண்டாம்.

Source: Read Full Article