CM Vijay Puzhal Jail: புழல் சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், எதிர்பாராத சூழல் காரணமாகவே பலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புழல் சிறைச்சாலையில் CM விஜய்:

முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே முன்னறிவிப்பு ஏதுமின்றி விஜய் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, எம்.சி. ராஜா விடுதி உள்ளிட்டவை அடங்கும். அதன் தொடர்ச்சியாக நேற்று புழல் சிறைச்சாலையிலும், அதன் அருகில் உள்ள காவல்நிலையத்திலும் திடீரென ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் உள்ள வசசிதிகள், செயல்படும் விதம் ஆகியவை தொடர்பாக பார்வையிட்டுள்ளார். சில கைதிகளிடமிருந்து கருத்துகளை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வுக்குப் பிறகு சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று பிரிவுகளில் விஜய் ஆய்வு..!

முதலமைச்சர் விஜய், மூத்த சிறை அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரணைக் கைதிகள், தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகம் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஆய்வு செய்துள்ளார். அப்போது சில கைதிகளிடம் வசதிகள் மற்றும் அவர்கள் கையாளப்படும் விதம் குறித்து கருத்துகளையும் கேட்டறிந்தார். அவர் சிறை சமையலறைக்குச் சென்று உணவைப் பரிசோதித்த பின்னர், ஆடை சேமிப்புப் பகுதி மற்றும் மருத்துவ வசதிகளைப் பார்வையிட்டுள்ளார்.

விஜய் சொன்ன அட்வைஸ் என்ன?

கைதிகளின் மீது அனுதாபம் கொண்டு முதலமைச்சர் விஜய் பேசியதாக புழல் சிறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசுகையில், “ கைதிகளின் ஆர்வங்களின் அடிப்படையில் அவர்களுக்கு மறுவாழ்வு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கூறினார். வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, கைதிகளுக்குப் போதுமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பெரும்பாலான கைதிகள் தங்களது சூழ்நிலைகள் காரணமாகவே அங்கு உள்ளனர் என்று முதலமைச்சர் கூறினார். தற்செயலாக நிகழும் தவறுக்கும் வேண்டுமென்றே செய்யப்படும் முறைகேட்டிற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி, கைதிகள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார். என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?

சிறைத்துறைக்கு புதிய அறிவிப்புகள் வருமா?

சட்டமன்றத்தில் சிறைத் துறையின் மானியக் கோரிக்கை விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து புழல் சிறைக்கு முதலமைச்சர் வருகை தந்துள்ளார். சிறைப் பணியாளர்களுக்காக கூடுதல் உடல் கேமராக்களுக்கு அரசு அனுமதி அளித்ததோடு, சிறை ஊழியர்களுக்கு புதிய தையல் படியையும் தவெக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சிறைத் துறை தரவுகளின்படி, ஒன்பது மத்திய சிறைகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 125 சிறைகளில் 23 ஆயிரத்து 608 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2,076 பேர் எழுத்தறிவற்றவர்கள், 323 பேர் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் 1,317 பேர் பட்டதாரிகள் ஆவர். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை தொடர்ந்து சிரைத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் அல்லது புதிய ஆலோசனைகள் தொடர்பான அறிவிப்பு ஏதேனு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Source: Read Full Article