CM Vijay TVK Govt 100 Days: கடந்த மே மாதம் 10ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஆகஸ்ட் 17ம் தேதியான இன்று தனது முதல் 100 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.

நூறு நாட்களை எட்டிய தவெக அரசு:

2026ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. 60 ஆண்டுகளாக நீடித்து வந்த திராவிட கழகங்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, முதல்முறையாக தேர்தல் களம் கண்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சட்டமன்ற கட்சியாக உருவெடுத்தது. வழக்கமாக புதிய ஆட்சி வந்தால் பல்வேறு நிர்வாக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால், அவற்றை கையாளவும், நிலைத்தன்மையை எட்டவும் குறைந்தது 6 மாதங்களாவது வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், அத்தகைய சலுகைகள் ஏதுமின்றி ஆட்சி அமைப்பது தொடங்கி அமைந்த முதல் நாள் முதலே பல்வேறு சவால்களையும், பிரச்னைகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டு, தவெக அரசு தனது முதல் நாட்களை எட்டியுள்ளது. அந்த வகையில் இந்த 100 நாட்களில் தவெக அரசு எதிர்கொண்ட முக்கிய நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தவெக அரசு எதிர்கொண்ட சவால்கள், பிரச்னைகள், சர்ச்சைகள்..!

ஆட்சி அமைப்பதிலேயே சவால்: மே.4ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையை தவெகவால் எட்ட முடியவில்லை. இதையடுத்து தேர்தல் பரப்புரையின் போது கடுமையாக விமர்சித்த திமுகவின், கூட்டணி கட்சிகளையே நாடி ஆட்சியமைக்க ஆதரவு கோரினார். கடும் இழுபறிக்கு பிறகு மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார்.

முதல் நாளே சர்ச்சை: ஆளுநர் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தவெக அரசுக்கு தலைவலியாக மாறியது.

மின்வெட்டு பிரச்னை: கோடை காலத்தில் மின்சார பயன்பாடு அதிகரித்து இருந்த சூழலில், நள்ளிரவில் அரங்கேறிய அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்களை கொதிப்படைய செய்தது. மாநிலம் முழுவதும் நீடித்த இந்த பிரச்னை புதிய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்தது.

மின் கட்டணம் உயர்வு? நள்ளிரவில் மின்வெட்டு ஒரு பிரச்னை என்றால், தவெக அரசு 200 யூனிட்கள் இலவசம் என அறிவித்த பிறகு வந்த மின் கட்டணமும் பொதுமக்களுக்கு ஷாக் அடித்தது. ஏராளமானோர் தங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் வந்துள்ளதாக இணையத்தில் பொறுமினர்.

சட்ட & ஒழுங்கு சிக்கல்: புதிய ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிய கொலை, கொள்ளை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

குதிரை பேர புகார்: முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் தனிப்பெரும்பான்மையை எட்டுவதற்காக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக ஆளுங்கட்சி மீது புகார் எழுந்தது.

இதையும் படியுங்கள்: BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

பழனி நில முறைகேடு: பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், தனி நபரால் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் பூகம்பமாக வெடித்தது. இதுதொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத பத்திரப்பதிவு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

ஆட்சி கவிழ்ப்பு சர்ச்சை: குதிரை பேர புகாருக்கு இடையே ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சிலர் தவெக எம்.எல்.ஏக்களை பேரம் பேசியதாக வெளியான புகார் மாநில அரசியலில் புயலை கிளப்பியது. இந்த விவகாரம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரை நீண்டு திமுகவிற்கு தலைவலியாக மாறியது.

அரசு பொறுப்புகள்: தமிழ்நாடு அரசில் உள்ள பல்வேறு பதவிகளில் தனக்கு நெருக்கமானவர்களை முதலமைச்சர் விஜய் நியமித்தது பேசு பொருளானது. குறிப்பாக ஜோதிடர் ராதன் பணிடின் முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட, கடும் எதிர்ப்புக்கு பிறகு அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் ஜனநாயகன் தயாரிப்பாளர், பிகில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, லியோ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரனா ஜெகதீஸ் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்ட வண்ணமே உள்ளன.

காவிரி விவகாரம்: தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால், இந்த முறை குறுவை சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது. இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்தாலும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதேநேரம், தானே பெங்களூருவிற்கு சென்று டி.கே. சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த விஜய் திட்டமிட்டதையும் கடுமையாக சாடினர்.

சொத்து வரி உயர்வு: சென்னையில் சொத்து வரி மறு மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறி சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, அந்த நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Source: Read Full Article