Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?

Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
News Image

சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவாக அறிவிக்கப்படுள்ளது. பொதுமக்களிம் தொடர் எதிர்ப்பால் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி மறுமதிப்பீடு

பொதுவாக வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் காலி மனைகளின் உரிமையாளர்கள் அரசுக்கு சொத்து வரி கட்டுவது என்பது நடைமுறையில் உள்ளது. இந்த பணம் மூலம் மக்களுக்கு தேவையான சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவது வழக்கம். இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு உயர்ந்ததாக தகவல் வெளியானது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரவும் உண்மைக்கு மாறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்த சொத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அளித்த  உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுதான் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கிட்டதட்ட 30 ஆயிரம் பேருக்கு இந்த வரி உயர்வு தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டிள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சியின் இந்த சத்தமில்லா நடவடிக்கை கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப்… pic.twitter.com/3QykbzmSwZ
— Greater Chennai Corporation (@chennaicorp) August 13, 2026

எனக்கே தெரியாது - மேயர் பிரியா பதில்

பொதுமக்கள் வந்து விசரிக்கையில் ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பலரும் சொத்து வரி செலுத்திய நிலையில் மீண்டும் கூடுதலாக அறிவிக்கப்பட்ட தொகையை கட்ட வேண்டிய சுழலுக்கு தள்ளப்பட்டனர். இதுதொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியாவிடம் கேட்டபோது, கவுன்சிலர்கள் கூட்டத்தில் விவாதிக்காமல் அதிகாரிகள் தனிச்சையாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். இதுமேலும் பிரச்னையாக வெடித்தது.

மக்கள் எதிர்ப்பால் பணிந்த மாநகராட்சி நிர்வாகம்

இந்நிலையில் சொத்துவரி மறுமதிப்பீடு நடவடிக்கையை நிறுத்துவதாக சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு  செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.

இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே மீண்டும் மாற்றப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் கட்டியவர்களுக்கு திரும்ப கிடைக்குமா?

மேலும் இந்த மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks