Bofors Case: போஃபர்ஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

40 வருடகால வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான போஃபர்ஸ் லஞ்ச வழக்கு தொடர்பாக நிலுவையில் இருந்த இறுதி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இதன் மூலம் இந்த வழக்கில் இருந்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முழுமையாக முடிவுக்கு வந்தன. ஹிந்துஜா சகோதரர்கள் மற்றும் ஸ்வீடன் ஆயுத உற்பத்தியாளரான ஏபி போஃபர்ஸ் ஆகியோரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2005 ஆம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, வழக்கறிஞர் அஜய் கே. அகர்வால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக, இந்தியாவின் மிகவும் பரபரப்பான ஊழல் வழக்குகளில் ஒன்றில் மீதமிருந்த கடைசி சட்ட வழியையும் உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு என்ன?

மேற்குறிப்பிடப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீசந்த் பி. ஹிந்துஜா மற்றும் கோபிசந்த் பி. ஹிந்துஜா ஆகிய இருவரும் காலமானதைக் குறிப்பிட்டு, மேல்முறையீட்டிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்குவதற்கு மனுதாரர் கூடுதல் அவகாசம் கோரினார். அப்போது இவ்விவகாரத்தை மேலும் நீட்டிக்க முடியாது எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்துவிட்டதாலும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) செய்த மேல்முறையீடு முன்னரே தள்ளுபடி செய்யப்பட்டதாலும், இந்த நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்று நீதிபதி அமர்வு விளக்கமளித்தது.

போஃபர்ஸ் வழக்கு விவரம்:

இந்திய ராணுவத்திற்காக 400 ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்குவதற்காக, இந்திய அரசாங்கத்திற்கும் ஸ்வீடன் ஆயுத உற்பத்தியாளரான ஏபி போஃபர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே 1986 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி கையெழுத்தான ரூ.1,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திலிருந்து போஃபர்ஸ் வழக்கு உருவானது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதாக 1987-ல் ஸ்வீடன் வானொலி நிறுவனம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் ஊழல்களில் ஒன்றாக உருவெடுத்தன. இந்நிலையில். உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பின் மூலம், போஃபர்ஸ் வழக்கு தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தற்போது ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்துள்ளன.

இதையும் படியுங்கள்: CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?

நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு கடந்த 2005-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஹிந்துஜா சகோதரர்களையும் ஏபி போஃபர்ஸையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது. இந்த விசாரணைக்காகப் பொது கருவூலத்திலிருந்து கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றமும் கடுமையாக விமர்சித்திருந்தது. திருப்திகரமான விளக்கம் அளிக்காமல், மனுவைத் தாக்கல் செய்வதை சிபிஐ 4,522 நாட்கள் தாமதப்படுத்தியதாகக் கண்டறிந்ததை அடுத்து, 2018 நவம்பரில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான சிபிஐ-யின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Source: Read Full Article